நானும் மாலத்தீவுக்கு போகப்போறேன்: வைரலாகும் குஷ்புவின் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Saturday,November 21 2020]

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பலர் தற்போது மாலத்தீவில் சுற்றுலாவில் உள்ள நிலையில் நானும் விரைவில் மாலத்தீவு செல்ல போகிறேன் என நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் தனது கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றுள்ளார் என்பது தெரிந்ததே. அங்கு அவர் கடலுக்கு அடியில் உள்ள அறையில் எடுக்கப்பட்ட புகைப்படம் உள்பட பல்வேறு புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்.

மேலும் தமிழ் நடிகைகள் நடிகை பிரணிதா சுபாஷ், நடிகை வேதிகா ஆகியோர்களும் தற்போது மாலத்தீவில் தான் ஓய்வு எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் அழகழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் லாக்டவுனுக்குமுன் கணவருடன் திருமண நாளை கொண்டாட மாலத்தீவு சென்றதை மலரும் நினைவுகளாக நடிகை குஷ்பு புகைப்படங்களுடன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். திட்டமிடப்படாத அந்த பயண நாட்களை நான் மிகவும் ரசித்தேன் என்றும் லாக்டவுனுக்கு முன்பாக நாங்கள் மாலத்தீவு சென்றது இன்னும் மறக்க முடியாத பயணம் என்றும் கூறியுள்ளார். மேலும் 2021 ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி தனது திருமணநாள் வருவதை அடுத்து மீண்டும் மாலத்தீவுக்கு செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன் என்றும் அவர் கூறி உள்ளார்.

மேலும் கடந்தமுறை மாலத்தீவுக்கு சென்றபோது கணவருடன் எடுத்த ரொமான்ஸ் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்ஸ்கள் கமெண்ட்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆன்லைன் ரம்மிக்கு தடை: தமிழக அரசு அதிரடி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி விளியாட்டால் இளைஞர்கள் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழப்பதோடு ஒரு சிலர் தற்கொலை செய்து விலைமதிப்பில்லா உயிரை இழந்து வருவதை அடுத்து

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்படுவது இவரா? பரபரப்பு தகவல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட இருக்கும் நிலையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட அனிதா, சோம், ஆரி, சம்யுக்தா, ஆரி, பாலாஜி

சந்தோஷமா இரு, நான் போயிருவேன்: குலுங்கி குலுங்கி அழுத சுசி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று சுசி மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் சிறையில் இருந்து வரும் நிலையில், சிறையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பாலாஜி புலம்பியதை 3வது புரமோவில் பார்த்தோம்

எனக்கு நடந்தது போல் உங்களுக்கு நடந்திருந்தால் பேண்ட் ஈரமாகியிருக்கும்: குஷ்பு பதிலடி!

எனக்கு நடந்த கார் விபத்து போல் உங்களுக்கு நடந்திருந்தால் உங்கள் பேண்ட் ஈரமாகி இருக்கும் என்று நடிகை குஷ்பு, பிரபலம் ஒருவருக்கு பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணா இவர்? வைரலாகும் சிக்ஸ்பேக் ஸ்டில்!

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் மத்தியில் மனம் கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் என்பது தெரிந்ததே. ஹரிஷ் கல்யாண் தான் டைட்டில் பட்டம் வெல்வார் என எதிர்பார்த்தேன்