சினிமாவை பார்த்து யாரும் கெட்டு போவதில்லை. குஷ்பு

  • IndiaGlitz, [Friday,March 03 2017]

தமிழ் சினிமா, தமிழக அரசியல் என பிசியாக இருந்த குஷ்பு, சமீபத்தில் கேரளாவுக்கு சென்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக பேசிய பேச்சு கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. நடிகை பாவனா பாலியல் தொல்லை குறித்து பேசிய குஷ்பு, பாவனாவை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் ஆட்சி செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை, அரசியல் என்று விட்டு தள்ளிவிடலாம். ஆனால் நாட்டில் முன்னோடியாக நடிகர், நடிகைகள் செயல்பட்டு வருவதாகவும், மனிதனின் வாழ்க்கையை நடித்து காட்டும் நடிகர், நடிகைகளுக்கே பாதுகாப்பு இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் சினிமாவை பார்த்து யாரும் கெட்டு போவதில்லை என்றும் திருமணம் ஆகாத இளம் நடிகையை கடத்தி பாலியல் கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஒரு அரசே செயல்படுவது வருத்தமளிப்பதாகவும் அவர் பேசினார்.

குஷ்புவின் இந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழகத்தில் பல பாலியல் வன்முறைகள் நிகழ்ந்தபோது வாய் திறக்காத குஷ்பு சக நடிகைக்கு பாலியல் கொடுமை என்றால் பொங்குவது ஏன்? என்று கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.

நடிகையை பாலியல் கொடுமை செய்த குற்றவாளிகளை ஒரே வாரத்தில் கேரள காவல்துறையினர் பிடித்து நீதியின் முன் நிறுத்தியுள்ள நிலையில் கேரள முதல்வர் மீது குஷ்பு சுமத்தியுள்ள இந்த குற்றச்சாட்டு தேவைதானா என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

மேலும் சினிமாவை பார்த்து யாரும் கெட்டு போவதில்லை என்றும், நாட்டின் முன்னோடியாக நடிகர், நடிகைகள் செயல்பட்டு வருவதாக குஷ்பு கூறியதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கின்றது என்பதை நாம் விவரிக்க விரும்பவில்லை. தொடர்ந்து சினிமா சம்பந்தமான மற்றும் நடிகர் நடிகைகள் குறித்த செய்திகளை படித்து வரும் அனைவருக்கும் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியும். எளிமையான, அனைவரும் அணுகும் முதல்வராக இருந்து வரும் கேரள முதல்வர் பினராய் விஜயன் ஆட்சியை குஷ்பு பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, கடுமையான விமர்சனத்தை தவிர்த்திருக்கலாம் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

More News

100 ஆண்டு சினிமா வரலாற்றில் 'கபாலி' செய்த சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் ஓப்பனிங் வசூல், மொத்த வசூல் ஆகியவை தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத வசூல். ஒருசிலர் இந்த படம் தோல்வி என்றும், இந்த படத்தால் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் என்று கூறி வந்தாலும் இதுவொரு மாபெரும் வ

பெப்சி-கோக் எதிர்ப்பு எதிரொலி. ஓட்ஸ் பக்கம் பார்வையை திருப்பும் வெளிநாட்டு நிறுவனங்கள்

பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு பானங்கள் குடிப்பதால் உடல்நலத்திற்கு தீங்கானது என்பதை கிட்டத்தட்ட இந்தியர்கள் பலர் புரிந்து கொண்டதால் அதன் விற்பனை பெருமளவு சரிந்துள்ளது. குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் தமிழகத்தில் சுத்தமாக பெப்சி, கோக் விற்பனை இல்லை என்றாகிவிட்டது...

அஜித் படத்தை திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவேன். பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சு

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் உள்பட பிற மொழி படங்கள் டப் செய்து கர்நாடகாவில் வெளியிட கன்னட திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ் படங்கள் வெளியிடும் திரையரங்குகள் முன் அவ்வப்போது ஆர்ப்பாட்டமும் நடந்தது உண்டு....

அஜித்-அக்சரா குறித்து ஸ்ருதிஹாசன் கூறியது என்ன?

அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் பல்கேரியாவில் தொடங்கவுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் படக்குழுவினர் செய்து வருகின்றனர்...

பாலாவின் 'நாச்சியார்' படத்தில் ரஜினி பட தயாரிப்பாளர்

தேசிய விருது பெற்ற பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள 'நாச்சியார்' படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது என்பதை பார்த்தோம். இந்த படத்தில் ஜோதிகா மற்றும் ஜி.வி,.பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார்...