பாஸ்போர்ட் விவகாரம். குஷ்புவுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Thursday,March 02 2017]

நடிகை குஷ்புவின் பாஸ்போர்ட்டை அவர் மீதுள்ள வழக்குகளை காரணம் காட்டி பாஸ்போர்ட் அதிகாரி புதுப்பிக்க மறுத்ததை அடுத்து தொடரப்பட்ட வழக்கில் குஷ்புவுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, ' மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் 1993-இல் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளவர்கள் பாஸ்போர்ட்டை சில நிபந்தனைகளின் அடிப்படையில் புதுப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதால், குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முடியாது என மறுப்பதை சட்டப்படி ஏற்க முடியாது. எனவே நடிகை குஷ்புவின் பாஸ்போர்ட்டை மண்டல அதிகாரி புதுப்பித்து வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் அதேசமயம், புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை பெற்ற பின், குஷ்பு வெளிநாடு செல்லும் போது, எந்த நாட்டுக்கு செல்கிறார், எப்போது நாடு திரும்புவார் ஆகிய விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

More News

அருண்விஜய்யின் 'குற்றம் 23'. திரை முன்னோட்டம்

திரையுலகின் பின்னணி இருந்தும், 'முறை மாப்பிள்ளை' தொடங்கி பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தும் கோலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க கடந்த இருபது வருடங்களாக போராடி வருபவர் நடிகர் அருண்விஜய்...

எனது பெயரில் வன்முறை அறிவுரை. உடனே நிறுத்துக. கமல் வேண்டுகோள்

உலக நாயகன் கமல்ஹாசன் கூறியதாக ஒரு இணையதளத்தில் சில வன்முறை கருத்துக்கள் பதிவாகியுள்ளது

இளைஞர்களுடன் இணைந்து ராகவா லாரன்ஸ் நடத்தும் அடுத்த போராட்டம்

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தனது முழு ஆதரவை கொடுத்த ராகவா லாரன்ஸ் தற்போது அதைவிட முக்கிய பிரச்சனையான நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் களமிறங்கவுள்ளார்.

நெடுவாசல் போராட்டம் குறித்து நடிகர் சங்கத்தின் முக்கிய முடிவு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் போராடிய போராட்டத்திற்கு இணையாக தற்போது நெடுவாசல் போராட்டம் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது.

ஸ்டிக்கர் ஒட்டிய அன்புமணி ராமதாஸ் கைது

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் தமிழக அரசு இன்னும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ஒருசில டாஸ்மாக் கடைகளை அகற்றவில்லை.