close
Choose your channels

உங்கள் தோளில் சவாரி செய்ய முயலும் அரசியல் கட்சிகள்: கமல்ஹாசனுக்கு குஷ்பு அறிவுரை

Monday, July 31, 2017 • தமிழ் Comments

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுக்கும் போர்வையில் சில அரசியல் கட்சிகள் கமல்ஹாசனை தங்கள் கட்சியில் இழுக்கவும், அல்லது அரசுக்கு எதிராக தூண்டிவிடவும் செய்து வருகிறது.
ஆனால் எந்த கட்சியினர் ஊழல் செய்தாலும் அவர்களை எதிர்ப்பேன் என்று சமீபத்தில் தனது டுவிட்டரில் பதிவு செய்து தான் ஒரு நடுநிலையாளன் என்பதை கமல் நிரூபித்தார்.
இந்த நிலையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'எனது நண்பரே, உறுதியாய் இருங்கள். உங்களை நினைத்து நான் பெருமைய அடைகிறேன். ஒருசில அமைப்புகளும், செல்வாக்கு இழந்த சில அரசியல் தரப்பும், 2 நிமிட புகழ் வெளிச்சத்துக்காக உங்கள் தோளில் சவாரி செய்ய முயற்சிக்கலாம்.
நீங்கள் உங்கள் நிலையில் சரியாய் இருக்கின்றீர்கள். எப்போதும் உங்களுக்கு என்னுடைய ஆதரவு உண்டு. நான் உங்கள் பக்கம் என்றென்றும் நிற்பேன். சிறந்த மாற்றத்துக்கான உங்கள் போராட்டத்தை தடுக்க எவற்றையும் அனுமதிக்க வேண்டாம்' என்று குஷ்பு பதிவு செய்துள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz