close
Choose your channels

செம டஃப்பா இருக்கும் போலயே…. ஸ்ரீதேவியின் இளைய மகள் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!

Tuesday, October 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரின் கிளாமர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதைப் பார்த்த ரசிகர்கள் ‘இவர் அக்காவிற்கே டஃப் கொடுப்பார் போல‘ என ஆச்சர்யத்தை வெளியிட்டு உள்ளனர்.

இந்திய திரையுலகில் 80களில் கொடிக்கட்டிப் பறந்தவர்தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருப்பது ரசிகர்கள் அறிந்ததுதான். இதில் ஜான்வி கபூர் ‘தடக்‘ எனும் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி தற்போது வளர்ந்துவரும் நடிகைகளுள் ஒருவராக அறியப்படுகிறார். மேலும் படு கிளாமரான புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் அவ்வபோது வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூரும் தனது சமூகவலைத்தளப் பக்கங்களில் சில கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அக்காவிற்கே டஃப் கொடுப்பார் போலயே எனக் கமெண்ட்டுகளை பதிவிட்டு அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் குஷி கபூர், பிரபல இயக்குநர் ஜோயா அக்தரின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தி ஆர்ச்சீஸ்‘ எனும் திரைப்படத்தில் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் மற்றும் நடிகர் அமிதாப்பின் பேரன் அகஸ்தியா நந்தா ஆகியோர் இணைந்து நடித்து வருவதும் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.