பாகுபலி எழுத்தாளரின் கைவண்ணத்தில்  கிச்சா சுதீப்.. பிரமாண்டமாக உருவாகும் திரைப்படம்..!

  • IndiaGlitz, [Sunday,September 03 2023]

மிஸ்டர் பெர்ஃபெக்ட், ஸ்டைலிஷ் ஹீரோ மற்றும் பான் இந்திய நட்சத்திர நடிகர் கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய திரையுலக ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி.

மகதீரா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற வெற்றிப் படங்களின் கதாசிரியர், திரைக்கதை வித்தகர், பான் இந்தியா என்ற கருத்தை முதன் முதலில் உருவாக்கியவர், பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி படங்களின் கதாசிரியர், திரு வி விஜயேந்திர பிரசாத் அவர்கள், புகழ்பெற்ற கன்னட நிறுவனமான ஆர்.சி.ஸ்டுடியோவின் அறிமுகப் படத்திற்கான திரைக்கதையை மேற்பார்வையிடுகிறார். பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த பான் இந்தியப் படத்தில் நாயகனாக ஸ்டைலீஷ் ஸ்டார் கிச்சா சுதீப் நடிக்கிறார். இப்படத்தினை இயக்குநர் ஆர்.சந்துரு இயக்கவுள்ளார்.

இந்த மூன்று ஜாம்பவான்களும் இணைந்து உருவாக்கும் இந்தப் படத்திற்காக ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் காத்திருக்கிறது, இப்படம் இந்த வருடத்தின் மெகா ஹிட் படமாக அமையும். ஆர் சி ஸ்டுடியோஸ் கர்நாடகாவில் ஒரு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தயாரிப்பில், இந்த ஆண்டு 5 பெரிய படங்கள் திரைக்கு வருகிறது. இயக்குநர் ஆர் சந்துரு இதுவரை பணியாற்றிய படங்கள் மிக ஸ்பெஷலானதாக இருக்கும் அந்த வகையில், இந்தப் படமும் பல சிறப்புகளை கொண்டதாக இருக்கும். கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ரசிகர்களுக்கு பிரத்யேக விருந்தாக இப்படத்தின் டைட்டிலை வெளியிட ஆர் சி ஸ்டுடியோஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


விஜயேந்திர பிரசாத் திரைக்கதை மேற்பார்வை, கிச்சா சுதீப் நடிப்பு மற்றும் இயக்குநர் ஆர் சந்துரு இயக்கம் என இந்த மூன்று ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்கவுள்ள திரைப்படத்திற்காக ஒட்டு மொத்தத் திரையுலகமும் வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை எழுதியுள்ளார், அவை அனைத்துமே வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. மதிப்புமிக்க ஆந்திரா அரசின் நந்தி விருது மற்றும் ஃபிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். ஆர்சி ஸ்டுடியோஸ் இந்தப் படத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது, இப்படம் பான் இந்தியா கான்செப்ட்டை உடைத்து, உலகளாவிய திரைப்படத் தரத்தில், இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்திய படமாக இருக்கும். இதன் மூலம் ஆர்சி ஸ்டுடியோஸ் ஒரு உலகளாவிய தயாரிப்பு நிறுவனமாக மலரும்.

இதன் மூலம் உலகளாவிய வகையில் திறமையான மற்றும் வளர்ந்து வரும் இளம் திறமைகளுக்கு ஆர்சி ஸ்டுடியோஸ் வாய்ப்புகளை வழங்கும்.

இந்த மூன்று ஜாம்பவான்களும் ஒன்றிணைவது திரைத்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவும். கிச்சாவுடன் இணைந்து ஆர்சி ஸ்டுடியோஸ் நிறுவனம் ஒரு படத்தைத் தயாரிப்பது அவரது பிறந்தநாளில் உறுதியாகியுள்ளது.

More News

நீளும் 'தளபதி 68' கதாநாயகி லிஸ்ட்.. ஜோதிகா, சிம்ரனை அடுத்து இவரா? 20 வருடங்கள் கழித்து இணைகிறாரா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 68' திரைப்படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிக்க போவதாக கூறப்பட்ட நிலையில், இதனை அடுத்து ஜோதிகாவுக்கு பதில் சிம்ரன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக சேரன் படம்.. ஹீரோ இந்த மாஸ் நடிகரா?

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படத்தை இயக்குனர் சேரன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக

தனுஷின் D50 படத்தில் வில்லனாக நடிக்க முடியாது என கூறிய இசையமைப்பாளர்.. என்ன காரணம்?

நடிகர் தனுஷ் தற்போது இயக்கி வரும் D50 என்ற திரைப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஒருவரை வில்லனாக நடிக்க அழைத்ததாகவும் ஆனால் அவர் நடிக்க மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன

ரஜினியை திடீரென சந்தித்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.. அரசியல் ஆலோசனையா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று திடீரென சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்: திரையுலகினர் இரங்கல்..!

தமிழ் சினிமாவின் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் ஆர்எஸ் சிவாஜி காலமானதையடுத்து திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக