close
Choose your channels

கிடாரி-குற்றமே தண்டனை. சென்னை வசூல் நிலவரம்

Tuesday, September 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வெள்ளியன்று வெளியான சசிகுமாரின் 'கிடாரி' மற்றும் மணிகண்டன் இயக்கத்தில் விதார்த் நடித்த 'குற்றமே தண்டனை' ஆகிய இரு படங்களும் ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இரு படங்களின் சென்னை வார இறுதி வசூல் திருப்திகரமாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சசிகுமாரின் கிடாரி திரைப்படம் 19 திரையரங்க வளாகங்களில் 223 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.74,86,990 வசூல் செய்துள்ளது.
அதேபோல் 'காக்கா முட்டை' புகழ் மணிகண்டனின் இயக்கத்தில் வெளியான 'குற்றமே தண்டனை', 18 திரையரங்க வளாகங்களில் 151 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.25,70,660 வசூல் செய்துள்ளது.
மேற்கண்ட இரண்டு படங்களுமே திரையரங்குகளில் 75% பார்வையாளர்கள் நிரம்பியிருந்ததால் இந்த படங்கள் நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.