சசிகலா மீது ஆள்கடத்தல் வழக்கு. கைது செய்யப்படுவாரா?

  • IndiaGlitz, [Wednesday,February 15 2017]

ஜெயலலிதா சமாதி மீது சபதம் செய்துவிட்டு பெங்களூர் சிறையை நோக்கி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சென்று கொண்டிருக்கும் நிலையில் அவர் மீது இன்னொரு வழக்கு புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ ஒரு புகார் ஒன்றை காவல்துறைக்கு அனுப்பியுள்ளார். அவருடைய புகாரில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் எம்.எல்.ஏக்களை கடத்தி கூவத்தூரில் வைத்திருந்ததாகவும், அதில் இருந்து தான் தப்பித்து வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரை அடுத்து சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது ஆள்கடத்தல் உள்பட 3 பிரிவுகளில் கீழ் கூவத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்காக சசிகலா கைது செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஜெ. நினைவிடத்தில் சசிகலா சபதம். பெரும் பரபரப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, பெங்களூரில் சரண் அடைய கேட்டிருந்த அவகாசம் நிராகரிக்கப்பட்டதால் சற்று முன் பெங்களூருக்கு கிளம்பினார். செல்லும் வழியில் அவர் சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார்...

ஜெயலலிதாவின் 'போயஸ் கார்டன்' தற்போதைய நிலை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது 'போயஸ் கார்டன்' என்றாலே ஒரு தனி மதிப்பும் மரியாதையும் இருக்கும். போயஸ் கார்டனுக்குள் குறிப்பாக ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா இல்லம்' பகுதியில் யாரும் சாதாரணமாக நுழைந்துவிட முடியாது

முத்த போட்டிக்கு ரெடியா? காதலர்களுக்கான 'காதலர் தின' பரிசு

சயித் அலிகான், கங்கனா ரனாவத், சாஹித் கபூர் நடித்த 'ரங்கூன்' என்ற பாலிவுட் திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இது முடிவல்ல..ஆரம்பம். நடிகர் பிரகாஷ்ராஜ்

சசிகலாவின் சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளிவந்துவிட்டதால் கூடிய விரைவில் தமிழக அரசியல் குழப்பத்திற்கு முடிவு கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.