'கில்லிங் வீரப்பன்' படத்திற்கு தடை கேட்ட வழக்கில் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,December 29 2015]


பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கிய 'கில்லிங் வீரப்பன்' என்ற படம் வரும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் வெளியிட ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.பன்னீர் செல்வி என்பவர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

பா.பன்னீர் செல்வி தனது மனுவில் 'கில்லிங் வீரப்பன்' என்ற இந்த படம் வீரப்பன் மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி குறித்து தவறாக சித்தரிக்கின்றதாகவும், இந்த படம் வெளியானால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.


இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி 'கில்லிங் வீரப்பன்' படத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். மேலும் இந்த மனுவுக்கு ஜனவரி 4ஆம் தேதிக்குள் பதில் தர தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

'கில்லிங் வீரப்பன்' படத்திற்கு தடை விதிக்கப்படாததால், இந்த படம் திட்டமிட்டபடி ஐந்து மொழிகளில் வரும் புத்தாண்டு தினத்தில் வெளியாகிறது.

More News

ஆட்டோகிராப்' 2ஆம் பாகத்தில் லேடி சூப்பர் ஸ்டார்

தேசிய விருது பெற்ற படங்களை இயக்கிய இயக்குனர் சேரன் கடந்த 2000ஆம் ஆண்டுகளில் தரமான பல படங்களை இயக்கி வந்தார்...

5ஆம் பாகம் வரை 'பசங்க' படம் தொடரும். பாண்டியராஜன்

இயக்குனர் எம்.ராஜேஷ் என்றால் காமெடி படம், ராகவா லாரன்ஸ் என்றால் பேய்ப்படம், சிறுத்தை சிவா என்றால் ஆக்சன் படம்

ரஜினியின் பாணியை பின்பற்றும் ஜி.வி.பிரகாஷ்

டார்லிங், 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா ஆகிய இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்த ஜி.வி.பிரகாஷ் தற்போது மூன்று...

ரஜினியின் பாணியை பின்பற்றும் ஜி.வி.பிரகாஷ்

டார்லிங், 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா ஆகிய இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்த ஜி.வி.பிரகாஷ் தற்போது மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்...

கணவன் மனைவியை அண்ணன் தங்கையாக மாற்றிய சுந்தர் சி

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை 2' திரைப்படம் ஜனவரி 29ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது...