தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20வது எம்.எல்.ஏ: இம்முறை யார் தெரியுமா?

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று தமிழகத்தில் சுமார் 7 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே சமயத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது ஒரு ஆறுதலான செய்தி ஆகும்

இந்த நிலையில் தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், காவல்துறையினர் உள்பட பல துறைகளிலும் உள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

அந்த வகையில் தற்போது ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் இதில் ஒரு சிலர் அமைச்சர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

ஆம் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் என்பவருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

இதுதான் என்னுடைய கடைசி வீடியோ: தற்கொலைக்கு முயன்ற தமிழ் நடிகையால் பரபரப்பு?

விஜய், சூர்யா நடித்த 'பிரெண்ட்ஸ்' உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி தற்கொலை செய்யப்போவதாக பதிவு செய்து செய்துள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழ்நாட்டில் 4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: சென்னையில் இன்றைய பாதிப்பு எவ்வளவு?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களாக 6000ஐ தாண்டியுள்ள நிலையில் இன்று 4வது நாளாவும் 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ரம்மி மட்டுமின்றி அனைத்து சூதாட்ட கேம்ஸ்களையும் தடை செய்ய வேண்டும்: ராகவா லாரன்ஸ் பட இயக்குனர்!

ரம்மி மட்டுமின்றி ஆன்லைனில் விளையாடப்படும் கிரிக்கெட் உள்பட அனைத்து சூதாட்ட விளையாட்டுகளையும் தடைசெய்ய வேண்டுமென ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற படத்தை இயக்கிய சாய்ரமணி

28 ஆண்டுகளை பூர்த்தி செய்த தல அஜித்: காமன் டிபியை வெளியிட்ட காமெடி நடிகை

கடந்த 1993 ஆம் ஆண்டு இயக்குநர் செல்வா இயக்கிய 'அமராவதி' என்ற திரைப்படத்தில்தான், தல அஜித் நடிகராக அறிமுகமானார். இந்த நிலையில் தல அஜித் திரையுலகிற்கு அறிமுகமாகி 28 ஆண்டுகள் பூர்த்தி

பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்காததால் தூக்கில் தொங்கிய காதலர்கள்: அதிர்ச்சி தகவல்

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷாஜஹான்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரும் அவரது நெருங்கிய உறவினரான 18 வயது பெண் ஒருவரும் தூக்கில் தொங்கி தற்கொலை