'புஷ்பா' ரிலீசுக்கு முன் அல்லு அர்ஜூன் செய்த மகத்தான செயல்!

  • IndiaGlitz, [Thursday,December 09 2021]

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா, பகத் பாசில். உள்பட பலர் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லு அர்ஜுன் திரையுலக வரலாற்றில் இந்த படம் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் தென்னிந்திய திரையுலக வரலாற்றில் இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய சாதனை செய்யும் என்றும் திரையுலக வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்திற்காக கடந்த இரண்டு வருடங்களாக கடுமையாக உழைத்த படக்குழுவினர்களுக்கு அல்லு அர்ஜுன் மகத்தான பரிசை வாரி வழங்கியுள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் பணிபுரிந்த சுமார் 35 முதல் 40 நபர்களுக்கு தலா 10 கிராம் தங்க காசு கொடுத்துள்ளதாகவும், அதேபோல் சில முக்கிய பணியாளர்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் பரிசு கொடுத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்லு அர்ஜுனின் இந்த மகத்தான செயலை படக்குழுவினர்கள் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகமே பாராட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'காத்துவாக்குல ரெண்டு காதல்': சூப்பர் அப்டேட் தந்த விஜய் சேதுபதி!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை விஜய் சேதுபதி

பாவனி-அபினய்யை சந்தேகப்படுறீங்கன்னா, அப்போ இவங்களை? கேள்வி எழுப்பிய மதுமிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் இருக்கும் என்பதும் ஆனால் அந்த காதல் அந்த சீசன் முடிந்தவுடன் காணாமல் போய் விடும் என்பதையும் பார்த்து வருகிறோம். முதல் சீசனில் ஆரவ்-ஓவியா

ஹேர் ஸ்டைலில் புதுமை காட்டி ரசிகர்களை ஈர்த்த “மாநாடு“ நடிகை!

சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம்

இந்த தமிழ் நடிகை ஒரு கோல்ப் வீராங்கனையா? ஆச்சர்யமான ரசிகர்கள்!

தமிழில் கடந்த 2014 இல் வெளியான “என்னமோ ஏதோ” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரகுல்

கடற்கரையில் குட்டி வாக்… வைரலாகும் சூர்யா-ஜோதிகா புகைப்படம்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம்வரும் நடிகர் சூர்யா- ஜோதிகா தம்பதிகள் இருவரும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும்