“கிங் ஆஃப் கோதா” படத்தின் கேரக்டர்கள் அறிமுகம். பெருமையுடன் வெளியிட்ட ஜீ ஸ்டுடியோ..!

  • IndiaGlitz, [Saturday,June 24 2023]

Zee Studios மற்றும் Wayfarer Films இணைந்து வழங்கும் 'கிங் ஆஃப் கோதா', ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களை ஈர்க்கும் வகையில், மாஸான ஒரு கமர்ஷியல் படத்திற்குரிய அனைத்து அம்சங்களையும் இப்படம் கொண்டுள்ளது. படத்தின் ஒவ்வொரு தகவலுக்காகவும், ரசிகர்கள் ஏங்கி வரும் வேளையில், இப்படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த அதிரடியான அறிமுக வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வீடியோ, படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை சுவாரஸ்யமான ஸ்கெட்ச் வடிவில் அறிமுகப்படுத்துகிறது. அதிலும் துல்கர் சல்மானை 'ராஜாவாக' சித்தரித்திருப்பது, ரசிகர்களிடம் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கும் வகையில், அசத்தலாக அமைந்துள்ளது.

இப்படத்தில் துல்கர் சல்மான் உடன், டான்சிங் ரோஸ் சபிர், பிரசன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன், சாந்தி கிருஷ்ணா, வட சென்னை சரண், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

துல்கர் சல்மானுக்கு உள்ள மிகப்பெரும் வரவேற்பையும், ஓணம் பண்டிகையின் விடுமுறை காலத்தையும், பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இப்படத்தை வரும் ஓணம் பண்டிகைக்கு வெளியிட Zee Studios மற்றும் Wayfarer Films நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இப்படத்தை இயக்கியுள்ளார், ஷான் ரஹ்மான் மற்றும் ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

எதிர்பார்ப்பு மிக்க இப்படத்தின் அதிரடியான டீசரை, ஜூன் 28 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிடவுள்ளனர்.

தனித்துவமான கதையுடன், மிரட்டலான உருவாக்கத்தில், ரசிகர்களை மகிழ்விக்கும் புதுமையான படைப்பாக மிகப் பெரும் பொருட்செலவில், Zee Studios மற்றும் Wayfarer Films நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

More News

அடுத்தடுத்து சில மணி நேரங்களில் 2 உறவினர்களை இழந்த நடிகர் போஸ் வெங்கட்.. ரசிகர்கள் ஆறுதல்...!

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் அடுத்தடுத்த சில மணி நேரங்களில் இரண்டு பேர் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தது அவரது குடும்பத்தினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மருத்துவமனையில் குஷ்பு.. என்ன ஆச்சு? அவரே வெளியிட்ட விவரங்கள்..!

நடிகை குஷ்பு கடந்த ஏப்ரல் மாதம் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

தண்ணீர் தொட்டியில் குழந்தை பெற்ற தமிழ் நடிகரின் மனைவி.. ஷாக்கிங் வீடியோ..!

பிரபல தமிழ் நடிகரின் மனைவி தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை பெற்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 

தனுஷின் அடுத்த படத்தில் அமலாபால்..? ஆனால் ரசிகர்கள் ஏமாற்றம்.. என்ன காரணம்?

தனுஷின் அடுத்த திரைப்படத்தில் அமலாபால் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்தாலும் அவரது ரசிகர்கள் இன்னொரு தகவலால் ஏமாற்றத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.

பெண் ஓட்டுநர் ஷர்மிளா வாழ்வில் திருப்புமுனை: உறுதி அளித்த கனிமொழி எம்பி..!

 கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவின் பேருந்தில் இன்று காலை திமுக எம்பி கனிமொழி பயணம் செய்த நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.