பஞ்சாபின் கனவில் மண்ணைப் போடுமா சென்னை?

  • IndiaGlitz, [Sunday,November 01 2020]

பஞ்சாபின் கனவில் மண்ணைப் போடுமா சென்னை?

 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணிகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறதுஇதில் பஞ்சாப் அணி  கட்டாய வெற்றியை நோக்கிக் களமிறங்குகிறது

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறதுஇந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்தோனி தலைமையிலான  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிவிட்டதுகிங்ஸ்  லெவன்  பஞ்சாப் அணி இந்தப் போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளது. 

கடந்த போட்டியில் இதே இக்கட்டான நிலையில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி வீழ்த்தியது

தற்போது ரன்ரேட்  அடிப்படையில் ஊசலாடிக்கொண்டுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அடுத்த சுற்றுக்கான  வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள இப்போட்டியில்  வெற்றி பெற வேண்டும்சென்னையைப் பொருத்தவரை பிளே ஆஃப் வய்ப்பு இல்லை என்றாலும், ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கவும்தன்னால் இன்னமும் வெற்றிபெற முடியும் என்பதையும் நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளது. எனவே சென்னை அணி அவ்வளவு எளிதாக வெற்றியை கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணிக்குவிட்டுக்கொடுக்காது

வாய்ப்பு எப்படி 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை விட சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு  மட்டுமே ரன் ரேட் அதிகமாக உள்ளதுஅதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி  அடுத்த சுற்று வாய்ப்பைப் பெற சென்னை அணிக்கு எதிராக வெற்றியைப் பதிவு  செய்ய வேண்டும்தவிரசன் ரைசர்ஸ்  அணி ஒரு போட்டியில் தோல்வியடைய  வேண்டும்எனவே இப்போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு மிகவும்  முக்கியமான போட்டியாகும் தொடர் தோல்வியில் இருந்து மீண்டுஐந்து  வெற்றிகளைப் பெற்ற பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணியிடம் மண்ணைக் கவ்வியதே அந்த அணியின் இந்த இக்கட்டான நிலைக்கு காரணம்சென்னைக்கு எதிரான இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 1 ரன்னில் வென்றால், ராஜஸ்தான் அணி தனது கடைசி போட்டியில் 64 ரன்கள்  வித்தியாசத்திலோ அல்லது கொல்கத்தா அணி 86 ரன்கள் வித்தியாசத்திலோ வென்று அடுத்த சுற்றுக்கான  வாய்ப்பைப் பெறலாம்

பெங்களூர்கொல்கத்தா அணிகள் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பைப் பெற வெற்றி தேவை என்ற நிலையில் இருந்தபோது சென்னை அணி வெற்றி பெற்று அந்த அணிகளின் வாய்ப்புக்கு முட்டுக்கட்டை போட்டது

கெயில் சூறாவளி 

பஞ்சாப் அணியைப் பொருத்தவரையில் அந்த அணியில் அதிரடி வீரரான கிறிஸ்  கெயில் நல்ல பார்மில் இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலம்இவருடன்  கேப்டன் கே எல் ராகுலும் இந்த தொடர் முழுவதும் மிகச்சிறப்பாகச்  செயல்பட்டுள்ளார்இதனால் நிச்சயமாக சென்னை அணி   பவுலர்களுக்குத்  தலைவலி தான்.

 சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் அடுத்த ஆண்டு தொடருக்கான  வாய்ப்பைத் தற்போதே உறுதி செய்துகொண்டார்இவருடன் மற்ற  பேட்ஸ்மேன்களும் கைகோர்த்து அணியை வெற்றி  பெறச் செய்ய வேண்டும்

 சென்னைபஞ்சாப் என இரு அணிகளும் தமது கடைசிப் போட்டியில்   பங்கேற்கின்றன. வெற்றியுடன் தொடரை முடிக்க இரு அணிகளும் போராடும் என்பதால் இப்போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காதுஅபுதாபியில் மதிய நேரத்தில் போட்டி நடப்பதால்சுழற்பந்து வீச்சாளர்களுக்கு  ஆடுகளம் சாதகமாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

 உத்தேச லெவன் அணி

சென்னை சூப்பர் கிங்ஸ்ருதுராஜ் கெய்க்வாட்ஃபாஃப் டூ பிளஸிஅம்பத்தி ராயுடுஜகதீசன்சாம் கரன்ரவீந்திர ஜடேஜாமிட்சல் சாண்ட்னர்தீபக் சாஹர்இம்ரான்  தாஹிர்மோனு குமார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் : கே.எல்ராகுல்மந்தீப் சிங்கிறிஸ் கெயில்நிகோலஸ் பூரன்கிலென் மேக்ஸ்வெல்தீபக் ஹூடா,  ரவி பிஷ்னோமுருகன் அஸ்வின்முகமது ஷமி,கிறிஸ் ஜார்டன்ஹர்ஷ்தீப் சிங்.

More News

தமிழகத்தில் திரையரங்குகள், பள்ளி-கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைந்ததை அடுத்து, அடுத்தகட்ட ஊரடங்கு மற்றும் தளர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது

அர்ச்சனாவை வஞ்சப்புகழ்ச்சி செய்கிறாரா கமல்ஹாசன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய அடுத்த புரமோவில் அர்ச்சனாவை புகழ்வது போல கமலஹாசன் கிண்டல் செய்வது போல் வெளிவந்திருக்கும் வீடியோ நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது.

கே.பாக்யராஜ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகும் யூடியூப் பிரபலம்!

பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான 'முந்தானை முடிச்சு' படத்தில் இடம்பெற்ற முருங்கைகாய் காமெடியை யாராலும் மறக்க முடியாது.

தனுஷின் அடுத்த படத்தின் நாயகியாகும் ஒரே படத்தில் பிரபலமான நடிகை!

தனுஷின் அடுத்த படத்தில் ஒரே படத்தில் பிரபலமான நடிகை நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனக்குரிய Hus இன்னும் கிடைக்கல… 10 கல்யாணம் முடிஞ்சு 11 ஆவது முறையாக மணப்பெண் போட்ட கண்டிஷன்!!!

அமெரிக்காவில் ஒரு பெண் 10 திருமணங்களைச் செய்த பிறகும் சரியான துணை கிடைக்காமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.