நாளை 'டிடி நெக்ஸ்ட் லெவல்' ரிலீஸ்.. இன்று படக்குழு எடுத்த அதிரடி முடிவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், இன்று அந்த படத்தின் குழுவினர் எடுத்த அதிரடி முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சந்தானம் நடிப்பில், ஆர்யா தயாரிப்பில் உருவான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற திரைப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியிருந்த நிலையில், இந்த படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும், இந்த படத்தில் இடம்பெற்ற கிஸ்ஸா என்ற பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சில இந்து அமைப்புகளும், பாஜக பிரமுகர்களும் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சந்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
அது மட்டுமின்றி, திருப்பதிக்கு சாமி கும்பிட சென்ற எடப்பாடி பழனிச்சாமி, இடம் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர் இந்த பாடலை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர்.
இந்த நிலையில், ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாடலை படக்குழுவினர் நீக்கி உள்ளதாகவும், நாளை வெளியாகும் திரைப்படத்தில் இந்த பாடல் இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com