க/பெ ரணசிங்கம்' இயக்குனருக்கு தயாரிப்பாளர் கொடுத்த சிறப்பு பரிசு!

  • IndiaGlitz, [Wednesday,November 04 2020]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவான ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் கடந்த மாதம் 2ஆம் தேதி ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த படம் அனைத்து தரப்பினர்களாலும் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

வசூல் அளவிலும் இந்த படத்தை சுமார் 5 கோடிக்கும் மேல் ஓடிடியில் பார்த்ததாகவும், இதனால் சுமார் ரூ.10 கோடிக்கும் மேல் இந்த படம் வசூலானதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் மக்களிடையே நல்ல வரவேற்பும், தயாரிப்பாளருக்கு நல்ல லாபமும் இந்த படம் கொடுத்ததை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ், இயக்குனர் விருமாண்டிக்கு புத்தம் புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் கொடுத்த புத்தம் புதிய காருடன் விருமாண்டி குடும்பத்தினர் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More News

அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பின் உள்ள தற்கொலை வழக்கு என்ன? பரபரப்பு தகவல்!

ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் எந்த வழக்குக்காக கைது செய்யப்பட்டார்

நடமாடும் 'அம்மா உணவகம்': தமிழக முதல்வரின் அசத்தல் திட்டம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது அடுத்தகட்டமாக நடமாடும் அம்மா உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

பாலாஜி-ஷிவானி வேற லெவல் ரொமான்ஸ்: 'மாஸ்டர்' பாடல் பின்னணியுடன் அசத்தல்

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாகவே பாலாஜி-ஷிவானி ரொமான்ஸ் காட்சிகளை ஆங்காங்கே காண முடிகிறது. ஒரு மணி நேர நிகழ்ச்சியில் முக்கால் மணி நேரம் சண்டை சச்சரவு இருந்து

பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் விஜய் பட நடிகை: 3வது வைல்கார்டா?

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதலில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் ரேகா, வேல்முருகன் ஆகிய இரண்டு போட்டியாளர்கள்

தமிழக முதல்வரிடம் முக்கிய வேண்டுகோள் வைத்த கார்த்திக் சுப்புராஜ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் முக்கிய வேண்டுகோள்