close
Choose your channels

எங்க திரும்பினாலும் நம்ம நியூஸ்தான்: சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் உற்சாகம்

Thursday, November 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ திரைப்படத்திற்கு நீதிமன்றம் சற்றுமுன் இடைக்கால தடை விதித்ததால் இந்த படம் திட்டமிட்டபடி வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளிவருமா? என்ற கவலை அவரது ரசிகர்களிடையே எழுந்தது. மேலும் அனைத்து ஊடகங்களிலும் இந்த படத்திற்கான தடை குறித்த செய்திகளும் வெளிவந்துள்ளது

இதுகுறித்து ஹீரோ பட நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘டிவி, ரேடியோ, நியூஸ் சேனல் என எங்க திரும்பினாலும் நம்ம நியூஸ்தான். இலவசமாக படத்தை புரமோஷன் செய்யும் அனைவருக்கும் நன்றி. நமக்கு ரசிகர்கள் எல்லா பக்கமும் இருக்காங்க போல! ரசிகர்களுக்கு ஒரு செய்தி, யாரும் கவலைப்படாதீங்க. படம் கண்டிப்பாக டிசம்பர்ம் 20 வருது’ என்று உறுதியளித்துள்ளது. இதனையடுத்தே சிவகார்த்திகேயன் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். மேலும் முக்கிய வேடங்களில் ஆக்சன்கிங் அர்ஜூன் மற்றும் இவானா நடித்து வரும் இந்த படம் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.