close
Choose your channels

விளையாடாமல் இருந்தாலும் அவரு டாப்புதான்… அசத்தும் இந்தியக் கேப்டன்!

Wednesday, March 3, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது. ஆனால் இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி பெரிய அளவிற்கு பங்காற்ற வில்லை. இது நமக்கு தெரிந்ததுதான். மேலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியைத் தவிர விராட் கோலி வேறு எந்த டி20 போட்டிகளிலும் இதுவரை கலந்து கொள்ளவில்லை.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இது முடிந்ததும் இங்கிலாந்துடன் 5 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. நிலைமை இப்படி இருக்கும்போது கடந்த ஆண்டு ஐசிசி வெளியிட்ட டி20 தரவரிசைப் பட்டியலில் 7 ஆவது இடத்தில் இருந்த விராட் கோலி தற்போது 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதைப் பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வியப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

மேலும் நம்ம கேப்டன் விளையாடவில்லை என்றாலும் அவரு எப்போதும் டாப்புதான் என்று நெட்டிசன்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஐசிசி வெளியிட்ட டி20 தரவரிசைப் பட்டியலில் கேப்டன் விராட் கோலி 697 புள்ளிகளுடன் 7 ஆவது இடத்தில் இருந்தார். தற்போது அதே புள்ளிகளுடன் ஒரு இடம் குறைந்து 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆனால் 13 இடத்தில் இருந்த ரோகித் சர்மா இந்த தரவரிசைப் பட்டியலில் அடுத்த எண்ணிற்கு பின்தள்ளப்பட்டு உள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆச்சர்யம் அடைந்து உள்ளனர். இந்நிலையில் தற்போது ஐசிசி வெளியிட்டு உள்ள தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலன் 915 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் கே.எல். ராகுல் 2 ஆவது இடத்திலும் இடம்பிடித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.