இரு நாடுகளுக்கு இடையே நடந்த “100 ஆண்டு போர்” பற்றி தெரியுமா??? சுவாரசியம் நிறைந்த கதை!!!

  • IndiaGlitz, [Thursday,May 28 2020]

 

இன்றைய காலத்தில் இரு நாடுகளுக்கு இடையே ஒரு போர் சூழல் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். போரில் இரு நாடுகளும் எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கும்? ராக்கெட், குண்டு, விமானம், அணு ஆயுதம் எனப் பல்வேறு உயர்த் தொழில் நுட்பத்தை வைத்திருக்கிற இன்றைய நாடுகள் குறைந்தது 3 மணி நேரம் போர் செய்தாலே போதும், நாட்டின் பெரும்பாலான பகுதி மண்ணுக்குள் புதைந்து விடும். நிலைமை இப்படியிருக்க பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளும் கிட்டத்தட்ட 116 ஆண்டுகள் ஒரு போரைத் தொடர்ந்து நடத்தி இருக்கிறார்கள். இந்தப் போர் பற்றி பேசும் அனைத்து வரலாற்று ஆய்வாளர்களும் “100 ஆண்டு போர்” என்றே இதை குறிப்பிடுகின்றனர்.

அப்படி என்ன காரணத்திற்காக 100 ஆண்டுகள் தொடர்ந்து போர் நடைபெற்று இருக்கும்? இதுதான் சுவாரசியமே. அன்றைய மன்னராட்சி காலத்தில் ஆண்பிள்ளை இல்லாத அரசனுக்கு ஆட்சியை துறக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டு இருக்கிறது. பிரான்ஸை ஆண்ட IV ஆம் சார்லஸ் மன்னனுக்கு ஆண்பிள்ளை கிடையாது. இவரது இறப்புக்குப் பின்னர் மக்கள் தூரத்து உறவினரான VI ஆம் பிலிப் ஐ மன்னனாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் IV ஆம் சார்லஸ் மன்னனுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட உறவினரை விட இன்னொரு நெருங்கிய உறவினர் இருந்தார் என்று கூறப்படுகிறது. அவர்தான் III ஆம் எட்வர்ட். பிரச்சனை இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. தன்னைத் தேர்ந்தெடுக்காமல் மக்கள் VI ஆம் பிலிப் ஐ தேர்ந்தெடுத்து விட்டாகளே என்ற ஆத்திரம். ஆரம்பித்தது சூழ்ச்சிப் படலம்.

ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த பிரான்ஸ் மன்னன் VI ஆம் பிலிப் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த அக்விடைன் என்ற டச்சு பகுதியை தனது படையெடுப்பால் ஆக்கிரமிக்க செய்கிறான். அந்த ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துகிறார் VI ஆம் எட்வர்ட். இப்படி ஆரம்பித்த போரானது 1337 இல் இருந்து 1453 வரை தொடர்ந்து நடக்கிறது. கத்திக் கடப்பாறைகளைக் கொண்டு ஆரம்பித்த இந்த பிரச்சனை கடைசியில் துப்பாக்கியை கொண்டு முடித்து வைக்கப்படுகிறது. தொழில் நுட்பம் அவ்வளவு வளரும் காலக் கட்டம் வரையிலும் இந்தப் போர் தொடர்ந்து நடைபெற்று இருக்கிறது.

இந்நிகழ்வுக்குப் பின்னால் சில வரலாற்றுக் காரணங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது பிரான்ஸ் நாட்டின் வாரிசு பிரச்சனைக்காக மட்டும் இத்தனை ஆண்டு இந்த போர் நீடிக்கவில்லை. ஏற்கனவே இங்கிலாந்திற்கும் பிரான்ஸ்க்கும் இடையே 1066 காலக்கட்டத்தில் இருந்தே வெறுப்பு புகைந்து கொண்டு இருந்தது. அந்த வெறுப்புத்தான் அணையாமல் 100 ஆண்டு போராக நீடித்து இருக்கிறது எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த போரை நடத்துவதற்காக அடுத்தடுத்து வந்த பிரான்ஸ் மன்னர்கள் தங்களது நாட்டை விட அதிக வரிவருவாயை வசூலித்து மக்களை பிழிந்து எடுத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த விசாயமும் பால் பட்டு போயிருக்கிறது.

அரண்மனைகள், கட்டிடங்கள் என இந்தப் போரில் சுமார் 18 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலங்கள் அழிக்கப் பட்டு இருக்கலாம் என ஒரு வரலாற்று ஆய்வாளர் மதிப்பிடுகிறார். 1413 ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பில் இருந்த V ஆம் ஹென்றி காலக் கட்டத்தில் போர் நடைபெற்ற இடத்தில் பல்வேறு மதம் சார்ந்த சடங்குகள் மற்றும் வழிபாடுகள் இருந்ததற்கான சான்றுகளை வரலாற்று ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். அன்றைக்கு போர் என்றால் மத நம்பிக்கையோடும், வழிபாட்டோடும் மிகவும் நெருக்கம் காட்டப்பட்டு இருக்கிறது. 100 ஆண்டுகள் நடைபெற்ற போருக்கு எவ்வளவு வீரர்களை பயன்படுத்தி இருப்பார்கள் என்ற மதிப்பீடும் இன்னொரு பக்கம் மண்டையை குடைந்து எடுக்கிறது. அதாவது ஒரு இங்கிலாந்து வீரன் இருந்தால் பிரான்ஸ் அரசு 10 வீரர்களை பயன்படுத்தியதாக வரலாறுகள் கூறுகிறது. அப்படி பார்த்தால் சுமார் 16 லட்சம் பிரான்ஸ் வீரர்கள் பயன்படுத்தப் பட்டு இருப்பார்கள் என்று ஒரு வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார்.

1431 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் அரசராக இருந்த VII ஆம் சார்லஸ் காலத்தில் 412 பீரங்கிகள் பயன்படுத்தப் பட்டதாகவும் குறிப்புகள் இருக்கின்றன. போர், வேல் கம்பியில் இருந்து பீரங்கிக்கு மாறியிருக்கிறது. இதுபற்றி அன்றைய எழுத்தாளர்கள் போர் வரலாற்றில் ஒரு பெரும் புரட்சி என்றே பதிவு செய்து இருக்கின்றனர். சாதாரண ஒரு வாரிசு போட்டிக்காக இருநாடுகள் தங்களது ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையையும் அடமானம் வைத்து விட்டு கிட்டத்தட்ட 116 ஆண்டுகள் போரில் ஈடுபட்டு இருக்கின்றன. கடைசியில் ஜெயித்தது யார் என்ற கேள்வியும் கண்டிப்பாக தோன்றியிருக்கும். வேறு யாராக இருக்க முடியும் ஒட்டுமொத்த நாட்டையும் சுரண்டி, மக்களைப் போரில் ஈடுபட வைத்த பிரான்ஸ் தான் இந்தப் போரில் ஜெயித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பாட்டு எப்படி இருக்கு? கோவிந்த் வசந்தாவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் கேட்ட கேள்வி

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தமிழ் திரையுலகில் உலகில் மட்டுமன்றி இந்திய திரையுலகிலும் ஹாலிவுட்டிலும் பிரபலமானவர் என்பது தெரிந்ததே.

தெலுங்கு தேசத்தில் சினிமா அரசியல் என இரண்டிலும் கொடிக்கட்டி பறந்த என்.டி.ஆர் பிறந்த தினம் இன்று...

என்.டி.ஆர் என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட தெலுங்கு திரைப்பட நடிகரும்,

எங்க நாட்டைச் சுற்றிப் பார்க்க வாங்க... ஒருவேளை கொரோனா வந்தா செலவை நாங்க ஏத்துக்கிறோம்!!! டீலிங்க் பேசும் நாடு!!!

கொரோனா பாதிப்பினால் உலகச் சுற்றுலாத் துறையே ஸ்தம்பித்து இருக்கிறது.

மோசமான வானிலை காரணமாக நேற்று விண்வெளிக்கு அனுப்பவிருந்த அமெரிக்கா விண்கலம் நிறுத்தப் பட்டது!!!

அமெரிக்காவின் தனியார் நிறுவனமான SpaceX நிறுவனம் தயாரித்த விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர்கள் இரண்டு பேர் நேற்று, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட இருந்தனர்.

1000ஐ தாண்டிய 6வது மண்டலம்: சென்னை மண்டலங்களின் கொரோனா நிலவரம்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500க்கும் அதிகமாகி கொண்டே உள்ள நிலையில்