close
Choose your channels

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பிரபல நடிகர்கள்

Friday, February 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இன்று நடந்து வருகிறது. அடங்காமல் திமிறும் காளைகளை அடக்க துடிக்கும் காளையர்களின் கண்கொள்ளா காட்சியை ஆயிரக்கணக்கான தமிழர்கள் நேரில் கண்டுகளித்து வருகின்றனர்.

மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், இலங்கை அமைச்சர் தொண்டைமான் உள்பட பல விஐபிக்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் நடத்திய எழுச்சி போராட்டத்திற்கு தங்களுடைய முழு ஆதரவை கொடுத்த பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் ஆரி ஆகிய நடிகர்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க வருகை தந்துள்ளனர். மாணவர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியால் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக அலங்காநல்லூரில் நடிகர் லாரன்ஸ் பேட்டி அளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.