உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பிரபல நடிகர்கள்

  • IndiaGlitz, [Friday,February 10 2017]

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இன்று நடந்து வருகிறது. அடங்காமல் திமிறும் காளைகளை அடக்க துடிக்கும் காளையர்களின் கண்கொள்ளா காட்சியை ஆயிரக்கணக்கான தமிழர்கள் நேரில் கண்டுகளித்து வருகின்றனர்.

மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், இலங்கை அமைச்சர் தொண்டைமான் உள்பட பல விஐபிக்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் நடத்திய எழுச்சி போராட்டத்திற்கு தங்களுடைய முழு ஆதரவை கொடுத்த பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் ஆரி ஆகிய நடிகர்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க வருகை தந்துள்ளனர். மாணவர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியால் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக அலங்காநல்லூரில் நடிகர் லாரன்ஸ் பேட்டி அளித்துள்ளார்.

More News

அரசியல் குழப்பம் தீர இதுதான் சரியான முடிவு. அரவிந்தசாமியின் ஆலோசனை

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் அவ்வப்போது தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரபல நடிகர் அரவிந்தசாமி அமைச்சர் ஒருவருக்கே பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

எங்கள் தொகுதி எம்.எல்.ஏவை காணவில்லை. போலீசில் புகார் அளிக்கும் பொதுமக்கள்

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் தற்போது கவர்னர் கையில் இருந்தாலும் பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பம் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்தான் முதல்வராக நீடிக்க வேண்டும் என்று உள்ளது. சசிகலாவுக்கு வெகுசிலரின் ஆதரவு மட்டுமே உள்ளது. மேலும் சசிகலா அதிமுக எம்.எல்.ஏக்களை சிறை வ&

சசிகலாவால் ஓபிஎஸ் படும் கஷ்டத்தை நானும் அனுபவித்தேன். பிரபல இயக்குனர்

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய சசிகலா, முதல்வர் பதவியையும் கைப்பற்ற முயற்சித்தபோது ஓபிஎஸ் அவர்கள் வெளிப்படுத்திய அரசியல் புயல் இன்னும் தமிழகத்தை சுழன்றடித்து வருகிறது. சசிகலாவின் பல சுயரூபங்களை அவர் வெளிப்படுத்தி கொண்டு வரும் நிலையில், சசிகலாவால் பாதிக்கப்பட்ட பலரும் தற்போது தைரியமாக பல விஷயங்களை கூறி வருகி

சி3 திரைப்படத்தை செல்போனில் பதிவு செய்த 8 பேர். காவல்துறை அதிரடி நடவடிக்கை

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சி3' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை ரிலீஸ் தினத்தன்றே ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக இணையதளம் ஒன்று சவால் விட்டது...

தனுஷின் ஹாலிவுட் படத்தில் ஆஸ்கார் விருது நடிகை

தனுஷ் நடிக்கவுள்ள ஹாலிவுட் படம் ' The Extraordinary Journey Of The Fakir' என்பதும் இந்த படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பதும் ஏற்கனவே அறிந்ததே...