close
Choose your channels

'மாஸ்டர்' படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்!

Wednesday, January 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 60% முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் 90% வியாபாரமும் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தை தமிழ் புத்தாண்டு விடுமுறை தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அனேகமாக ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதே தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ படமும் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவந்த பின்னரே உறுதி செய்யப்படும்

இந்த நிலையில் பிரபல நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் ’கொம்பு வச்ச சிங்கம்’ என்ற திரைப்படமும் தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புதிய போஸ்டர் ஒன்றும் சற்றுமுன் வெளியாகியுள்ளது. சசிகுமார் நடித்த ‘சுந்தரபாண்டியன்’ உள்பட ஒருசில படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கிய இந்த படத்தை இந்திரகுமார் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.