இந்தியாவை புரட்டி போட்ட ரயில் விபத்து.. ஒடிசா விரைகிறார் அமைச்சர் உதயநிதி..!

  • IndiaGlitz, [Saturday,June 03 2023]

20 ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் நிகழும் மோசமான ரயில் விபத்தாக நேற்று நடந்த கோரமண்டலம் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து பதிவாகியுள்ளது. இந்த ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1999 ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 285 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்றிரவு ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டதை அடுத்து இதுவரை 280 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தமிழக அமைச்சர்கள் உதயநிதி, எஸ்எஸ் சிவசங்கர் ஆகியோர் விபத்து நடந்த ஒரிசாவுக்கு செல்வதாகவும் தமிழ்நாட்டில் இருந்து அதிகாரிகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

கோரமண்டலம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பதை அடுத்து சென்னை சென்ட்ரல் நிலையத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்த பயணிகள் விவரங்கள் குறித்து அவரது அவர்களின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சென்னை தெற்கு ரயில்வே தலைமையகத்தில் அவசர கட்டுப்பாட்டு அறையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார் என்பதும் மீட்பு பணிகள் குறித்த விவரங்களை அவர் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்றும் இன்று நடைபெற இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

More News

மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - ஷங்கர்? '3.0' உருவாகிறதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'லால் சலாம்

அஜித், விஜய்,சூர்யா நடிகையின் கணவருக்கு ரூ.8000 கோடி சொத்து மதிப்பா?

அஜித், விஜய், சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகையின் கணவருக்கு ரூ.8000 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டூ பீஸ் பிகினி.. மாலத்தீவு கடற்கரையில் மஞ்சள் மோகினி ரகுல் ப்ரீத் சிங்..!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்றுமுன் மஞ்சள் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இன்று சிறப்பான நாள்… 'த்ரோபேக்' புகைப்படம் வெளியிட்ட போனி கபூர்!

இந்திய சினிமாவில் முக்கிய தயாரிப்பாளர்களுள் ஒருவராக இருந்துவரும் போனி கபூர் தனது மனைவியும் மறைந்த நடிகையுமான ஸ்ரீதேவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எனது மனைவி ஸ்ரீதேவிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தான்.. 'மாமன்னன்' விழாவில் போனிகபூர்..!

திரை உலகில் அழகான மற்றும் கவர்ச்சியான நடிகை என்றால் எனது மனைவி ஸ்ரீதேவிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தான் என 'மாமன்னன்' இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.