close
Choose your channels

அதுக்கே எனக்கு 7 வருஷம் ஆச்சு: கிண்டல் செய்த ரசிகருக்கு தீனா உருக்கமான பதில்

Wednesday, January 20, 2021 • தமிழ் Comments

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூலையும் விமர்சகர்களின் ஆதரவையும் பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி தவிர நாயகி மாளவிகா மோகனன் உள்பட ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே இருந்தது என்பதும் ஆனால் பெரும்பாலான நட்சத்திரங்களுக்கு ஒரு சில காட்சிகளே வந்துபோகும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது என்றும் விமர்சனங்கள் எழுந்தன

குறிப்பாக சாந்தனு உள்பட சிலர் ஹீரோவாக நடித்த நடிகர்கள் கூட ’மாஸ்டர்’ ஒருசில காட்சிகளில் மட்டுமே வந்து சென்றது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று ’கைதி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த தீனா, ’மாஸ்டர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாக செய்திகள் வெளி வந்தது

’கைதி’ போலவே தீனாவுக்கு இந்த படத்திலும் முக்கியத்துவமான வேடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ’மாஸ்டர்’ படத்தில் தீனா நடித்த காட்சிகள் ஒரு சில வினாடிகள் மட்டுமே வந்து போனது பெரும் ஏமாற்றத்தை அளித்தது

இந்த நிலையில் ’மாஸ்டர்’ பட குழுவினர்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்த போது, அதற்கு ஒரு ரசிகர், ‘ நீ இந்த படத்தில் வந்ததே ஏழு செகண்ட் தாண்டா’ என்று கிண்டல் செய்திருந்தார். இதற்கு உருக்கமான பதிலளித்துள்ள தீனா, ‘எனக்கு அதுவே பெரிய விஷயம் பிரதர், அந்த படத்துல 7 செகண்ட் வருவதற்கே எனக்கு ஏழு வருஷம் ஆச்சு’ என்று கூறியுள்ளார். தீனாவின் இந்த உருக்கமான பதிவு நெட்டிசன்களின் ஆதரவை பெற்று வருகிறது
 

Get Breaking News Alerts From IndiaGlitz