அமலாபாலுக்கு தற்காப்புக்கலையை கற்றுக்கொடுத்த நடிகர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,January 22 2020]

நடிகை அமலாபால் நடித்த ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் அமலாபால் ‘க்ராவ் மகா’ என்ற தற்காப்பு கலையை பயன்படுத்தியுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்திற்காக இந்த கலையை அவர் முறைப்படி பயின்றதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த கலையை அவருக்கு பயிற்சி அளித்தது ஒரு நடிகர் என தற்போது தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘சில்லுக்கருப்பட்டி’ என்ற படத்தில் நவநீதன் என்ற கேரக்டரில் நடித்திருந்த ஸ்ரீராம் தான் இந்த கலையை அமலாபாலுக்கு பயிற்சி கொடுத்துள்ளார். அதேபோல் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்த பிரபல பாலிவுட் பிரபல அனுராக் காஷ்யப் அவர்களுக்கும் இவர்தான் இந்த கலையை பயிற்சி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில்லுக்கருப்பட்டி படத்தில் ஸ்ரீராம் நடிப்பிற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இன்னும் ஒருசில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 

More News

'மாஸ்டர்' படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகி வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

எத்தனை ரஜினி வந்தாலும் எங்களை அசைக்க முடியாது: தமிழக அமைச்சர்

ஒரு ரஜினிகாந்த் அல்ல எத்தனை ரஜினிகாந்த் வந்தாலும் எங்களை அசைக்க முடியாது என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சற்றுமுன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார் 

டெங்கு கொசுக்களை ஒழிக்க செயற்கை கொசுக்கள்  உருவாக்கம்

கலிபோர்னிய சான் டியாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தற்போது செயற்கையாக ஒரு புதிய வகை கொசுக்களை உருவாக்கியுள்ளனர்.

ரஜினியை கண்டு அரசியல் கட்சியினர் பயப்படுகின்றனர்: சர்கார் பட நடிகர் கருத்து

ரஜினிகாந்த் ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசினாலும், பேட்டி அளித்தாலும் அவரது கருத்துக்கு எதிர் கருத்து கூறுவதை கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழப்பு – அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பரவியது

சீனாவில் ஒரு வகையான நிமோனியாவை பரப்பும் கொரோனா வகையைச் சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.