close
Choose your channels

சிம்பு - கெளதம் மேனன் படத்தின் நாயகி இவரா?

Saturday, July 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு - கெளதம் மேனன் இணைந்த ’விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ’அச்சம் என்பது மடமையடா’ ஆகிய இரண்டு வெற்றித் திரைப்படங்களை அடுத்து மூன்றாவது முறையாக இணைய உள்ளனர் என்பதும் இந்த படத்திற்கு ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் கீர்த்தி சனோன் என்ற பாலிவுட் நடிகை நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. நடிகை கீர்த்தி சனோன் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் சிம்பு படத்தில் நடிக்கும் தகவல் உறுதி செய்யப்பட்டால் இவர் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.