close
Choose your channels

இயக்குனர் லிங்குசாமி படத்தின் நாயகியான ஒப்பந்தமான பிரபல நடிகை!

Friday, March 5, 2021 • தமிழ் Comments

இயக்குனர் லிங்குசாமி நீண்ட இடைவேளைக்குப்பின் இயக்க இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தெனேனி ஹீரோவாக நடிக்க உள்ளார். ஸ்ரீநிவாச சித்தூரி என்பவர் தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார். இவரது இணைப்பு இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

நடிகை கீர்த்தி ஷெட்டி ஏற்கனவே தமிழில் அழகர்சாமியின் குதிரை, சகாக்கள், கொண்டான் கொடுத்தான், மாங்கா உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz