close
Choose your channels

பிரபாஸின் 'ஆதிபுருஷ்' படத்தின் நாயகி அறிவிப்பு!

Friday, March 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாகுபலி நடிகர் பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ஆதிபுருஷ்’. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ராமாயண கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் ராமர் கேரக்டர் பிரபாஸும், ராவணன் கேரக்டரில் சையது அலி கானும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தில் சீதை கேரக்டரில் நடிக்கும் நடிகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி சனோன் இந்த படத்தில் சீதை கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கீர்த்தி சனோன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஒரு மிகப்பெரிய பயணம் தொடங்க இருப்பதாகவும் ’ஆதிபுருஷ்’ படத்தில் உள்ள சீதை கேரக்டரில் நடிப்பதில் பெருமை படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

பூஷண் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் ’ஆதிபுருஷ்’ படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.