close
Choose your channels

கே.எஸ்.ரவிகுமாரின் 'வீடு பிரச்சனை வீடியோ'வுக்கு இதுதான் காரணமா?

Saturday, March 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் ஓய்வு பெறும் நேரத்தில் தான் கஷ்டப்பட்டு ஒரு வீட்டை வாங்கியதாகவும், ஆனால் அந்த வீட்டில் சில பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து விரைவில் விரிவாகப் பேசுவோம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கேஎஸ் ரவிக்குமார் கூறிய வீடு பிரச்சனை என்பது அவர் நடித்து வரும் ஒரு படம் குறித்தது என்பது தற்போது தெரியவந்துள்ளது. கேஎஸ் ரவிக்குமார் நடிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மதில்’. இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன், உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சொந்த வீடு கட்ட முயற்சிக்கும் அனைவரின் கதை தான் இந்த படத்தின் கதை என்றும் சொந்த வீடு கட்டும்போது ஏற்படும் பிரச்சனைகள் வீடு கட்டிய பிறகு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இந்த படம் பேச போவதாகவும், ஒவ்வொரு சொந்த வீடு கட்டுபவர்களின் அனுபங்கள் தான் இந்த படம் என்றும் இயக்குனர் ஜவஹர் மித்ரன் தெரிவித்துள்ளார்.

இந்த படம் ஜி5 ஓடிடி தளத்தில் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.