இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தம்பதிக்கு மணிவிழா வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Saturday,May 27 2017]

இந்து மதத்தை சேர்ந்த தம்பதியர்களில் ஆண்களுக்கு 60 ஆம் வயதில் "அறுபதாம் கல்யாணம்" என்கிற பெயரில் நடத்தப்படும் விழா "ஷஷ்டியப்த பூர்த்தி" அல்லது "மணிவிழா" என்று அழைக்கப்படுகிறது. அறுபதாவது வயது தொடங்கும்போது திருமணம் போன்று இந்த விழா நடத்தப்படுவதால் இந்த விழாவில் அந்தத் தம்பதியர்களின் பிள்ளைகள் அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இந்த "அறுபதாம் கல்யாணம்" என்கிற மணி விழா நிகழ்வு வயதான தம்பதியர்களுக்கு ஒரு மன நிறைவைத் தரும் விழாவாகவும் இருக்கிறது.

இந்த நிலையில் கோலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவர்களுக்கு இன்று திருக்கடையூரில் மணி விழா சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் கே.எஸ்.ரவிகுமார்-கற்பகம் ரவிகுமார் தம்பதியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தம்பதிகள் இன்றுபோல் என்றும் மன நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ எமது வாழ்த்துக்கள்

More News

நயன்தாரா என்னை தடுத்துவிட்டார். 'அறம்' இயக்குனர் கோபிநயினார்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கிய 'அறம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தளபதி 61: விஜய்க்கும் ரஹ்மானுக்கும் முக்கியமான படம்: ஏன் தெரியுமா?

இயக்குனர் அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் விஜய்க்கும், இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் முக்கியமான படமாக கருதப்படுகிறது. எப்படி என்பதை இப்போது பார்ப்போம்...

வெங்கட்பிரபுவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்த தகவல்களை வேட்பாளர் அறிவிப்பு போன்று அவர் பலகட்டமாக வெளியிட்டு வருகிறார்...

ரஜினி அரசியலுக்கு வருவது ஏன்? அண்ணன் சத்தியநாராயணா விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்தபோது அரசியலுக்கு வருவது குறித்து சூசகமாக தெரிவித்தார்...

ரகுராம்ராஜனுக்கு பாடம் நடத்திய ஐ.டி.பேராசிரியர் இவர் என்றால் நம்ப முடிகிறதா?

முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம்ராஜன் அவர்களுக்கு பாடம் எடுத்த கல்லூரி பேராசிரியர் மேலே உள்ள படத்தில் உள்ளவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை