close
Choose your channels

கே.எஸ்.ரவிகுமாரின் 'கூகுள் குட்டப்பா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Saturday, April 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கே எஸ் ரவிக்குமார் நடித்து தயாரித்த ‘கூகுள் குட்டப்பா’ படம் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான ’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்ற இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார் என்பதும் இந்தப் படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஜோடியாக நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே .

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டு பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த நிலையில் ‘கூகுள் குட்டப்பா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் செய்திகள் வெளியான நிலையில் இப்போது மே 6ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

கேஸ் ரவிக்குமார், தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு, பூவையார், சுரேஷ் மேனன், ஜி மாரி முத்து உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.