கே.டி.குஞ்சுமோனின் 'ஜெண்டிமேன் 2': அறிவிப்பிலேயே ரசிகர்களுக்கு தங்கக்காசு பரிசு!

  • IndiaGlitz, [Saturday,January 22 2022]

பிரபல தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் தயாரிப்பில் அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய திரைப்படம் ’ஜென்டில்மேன்’. கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில்தான் ஷங்கர் அறிமுகமானார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை அடுத்து காதலன், ரட்சகன், காதல் தேசம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்த கேடி குஞ்சுமொன் கடந்த 20 ஆண்டுகளாக திரைப்பட தயாரிப்பில் இருந்து ஒதுங்கி உள்ளார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் ’ஜென்டில்மேன் 2’ என்ற திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் அவர் ரசிகர்களுக்கு தங்க காசு பரிசு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

’ஜென்டில்மேன் 2’ படத்தின் இசையமைப்பாளர் யார் என சரியாக யூகித்து கண்டுபிடிப்பவர்களுக்கு தங்க காசுகள் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் இந்த படத்தின் இசையமைப்பாளர் யாராக இருக்கும் என்பதை யூகித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். கேடி குஞ்சுமோன் தயாரித்த பல படங்களுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ’ஜென்டில்மேன் 2’ படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

மலக்குடலில் வைத்து தங்கம் கடத்தல்… பிடிபட்டது எப்படி?

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஆசனவாய்

அல்லு அர்ஜூனின் அடுத்த படத்தை இயக்குவது தமிழின் பிரமாண்ட இயக்குனரா?

அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'புஷ்பா' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்தப் படம் திரையரங்குகளில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாகவும்

திருமணம் குறித்த தகவலை வெளியிட்ட பிக்பாஸ் பாவனி!

பிக்பாஸ் பாவனி தனது திருமணம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஒரு வருடம் தள்ளிப்போகும் 'மிஷன் இம்பாஸிபிள்' அடுத்தடுத்த பாகங்கள்: ரசிகர்கள் அதிருப்தி!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்த 'மிஷன் இம்பாஸிபிள்' படத்தின் ஏழாம் பாகம் மற்றும் எட்டாம் பாகம் படங்களின் ரிலீஸ் தேதி ஒரு வருடம் தள்ளிப்போனதாக தகவல் வெளிவந்துள்ளதை

ஹீரோவான 'மாஸ்டர்' மகேந்திரன்: டைட்டில் அறிவிப்பு

சரத்குமார் நடித்த 'நாட்டாமை' என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மகேந்திரன், தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரை பல படங்களில் நடித்து வந்துள்ளார்.