close
Choose your channels

கே.டி.குஞ்சுமோனின் 'ஜெண்டிமேன் 2': அறிவிப்பிலேயே ரசிகர்களுக்கு தங்கக்காசு பரிசு!

Saturday, January 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் தயாரிப்பில் அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய திரைப்படம் ’ஜென்டில்மேன்’. கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில்தான் ஷங்கர் அறிமுகமானார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை அடுத்து காதலன், ரட்சகன், காதல் தேசம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்த கேடி குஞ்சுமொன் கடந்த 20 ஆண்டுகளாக திரைப்பட தயாரிப்பில் இருந்து ஒதுங்கி உள்ளார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் ’ஜென்டில்மேன் 2’ என்ற திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் அவர் ரசிகர்களுக்கு தங்க காசு பரிசு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

’ஜென்டில்மேன் 2’ படத்தின் இசையமைப்பாளர் யார் என சரியாக யூகித்து கண்டுபிடிப்பவர்களுக்கு தங்க காசுகள் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் இந்த படத்தின் இசையமைப்பாளர் யாராக இருக்கும் என்பதை யூகித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். கேடி குஞ்சுமோன் தயாரித்த பல படங்களுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ’ஜென்டில்மேன் 2’ படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.