'ஜென்டில்மேன்  2' படத்தில் நயன்தாரா இல்லை, ஆனால் நயன்தாரா தான்! கேடி குஞ்சுமோன் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,March 23 2022]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் சூப்பர் ஹிட் படமான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாவது பாகத்தில் முக்கிய வேடத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் கேடி குஞ்சுமோன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா சக்கரவர்த்தி என்பவர் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் நடித்த குசேலம் திரைப்படத்தில் பசுபதியின் மகளாக நடித்த இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

மேலும் ’ஜென்டில்மேன் 2’ படம் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஆகிய மொழிகளில் உருவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எம்எம் கீரவாணி இசையில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நடிகை ஆண்ட்ரியாவிற்குக் கிடைத்த புது கவுரவம்… வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பாடகியாகவும் இருந்துவரும் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையாவிற்கு ஐக்கிய அரபு

திடீரென தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்றுவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா… என்ன காரணம்?

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா.

இப்படியொரு கையெழுத்தா? நெட்டிசன்களை மிரள வைத்த அரசு அதிகாரி!

ஒப்புதல் அளிக்கும் விதமாக நாம் அனைவரும் கையெழுத்திடும் பழக்கத்தை வைத்துள்ளோம்.

விஜய்சேதுபதியின் 'மாமனிதன்' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்: புதிய தேதி என்ன?

 நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையிலும் சமீபத்தில்தான் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ்

தேர்தல் முடிந்ததும் பசுத்தோல் உதிர்ந்துவிட்டது: கமல்ஹாசன்

தேர்தல் முடிந்ததும் பசுத்தோல் உதிர்ந்து விட்டது என கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது