கழுத்தில் கரன்சி மாலை, வீட்டில் குபேர பூஜை: வைரலாகும் வனிதா-பீட்டர்பால் புகைப்படம்

கடந்த சில நாட்களாகவே ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வந்த வனிதா விஜயகுமார் தற்போது கழுத்தில் கரன்ஸி மாலையுடன் கூடிய புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்

நடிகை வனிதா விஜயகுமார் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பரபரப்பான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது பீட்டர் பீட்டர் பால் மற்றும் தனது இரண்டு மகள்களுடன் தானும் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் உள்ள வனிதா மற்றும் பீட்டர்பால் ஆகிய இருவரின் கழுத்தில் கரன்ஸி மாலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது வீட்டில் லட்சுமி குபேர பூஜை நடந்ததாகவும் 2020 ஆம் ஆண்டின் இனி வரக்கூடிய மாதங்களாவது அனைவருக்கும் நல்லதாக இருக்கட்டும் என்றும் இந்த ஆண்டை தன்னால் மறக்கவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் கழுத்தில் கரன்சி மாலையுடன் பீட்டர் பால் மற்றும் வனிதா இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பீட்டர் பால் உடல் நலம் தேறி வந்ததையடுத்து இந்த பூஜை நடத்தப்பட்டதாகவும் அதுமட்டுமின்றி வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் என்பதற்காகவும் இந்த பூஜை நடத்தப்பட்டதாகவும் வனிதா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்

More News

அக்சராஹாசன் பாட்டியாக நடிக்கும் பின்னணி பாடகி: 10 வருடங்களுக்கு முன் கமல் படத்தில் நடித்தவர்!

கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் தமிழில் அஜித்தின் 'வேதாளம்' மற்றும் விக்ரமின் 'கடாரம் கொண்டான்' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்

'பிக்பாஸ் 4' நிகழ்ச்சியில் மேலும் ஒரு கவர்ச்சி நடிகை? தாங்குவார்களா ரசிகர்கள்?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள்

புதியஅரசியல் சமைப்போம்: பாரதியாரின் நினைவு நாளில் கமல் டுவீட்

உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் மகாகவி பாரதியாரின் மீது தீவிர பற்று உள்ளவர் என்பதும் அவருடைய பாடல்கள் மற்றும் கருத்துக்களை தனது படங்களில் ஆங்காங்கே பயன்படுத்தியவர்

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட ஹீரோ? 

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசன் விரைவில் தொடங்கப்பட இருக்கும் நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள்

கங்கனா ரனாவத் வீட்டிற்கே சென்று சந்தித்த மத்திய அமைச்சர்: அடுத்த படத்தின் கேரக்டர் குறித்தும் தகவல்

கடந்த சில நாட்களாக கங்கனா ரனாவத், தற்கொலை செய்துக் கொண்ட நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார்.