என்ன ஆச்சு 'குபேரா' படக்குழுவுக்கு? தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றம்.. நாளை ஆனால் செம்ம அப்டேட்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தனுஷ் நடித்த ‘குபேரா’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
ஆனால் தற்போது நாளை இந்த ட்ரைலர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தாலும் நாளை செம அப்டேட் என்பதால் ரசிகர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர். இது குறித்து ‘குபேரா’ படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
எங்கள் ‘குபேரா’ படக்குழு, ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்ற கடுமையாக உழைத்து வருகிறது. டிரெய்லரின் உண்மையான வீரியம், படக்குழு, நடிகர்கள், மற்றும் ரசிகர்கள் என அனைவரும் ஒன்றாக கூடி பார்க்கும் போது தான் முழுமையாக வெளிப்படும் என்று நாங்கள் அனைவரும் ஒருமித்து முடிவு செய்துள்ளோம்.
அதனால்தான், இன்று டிஜிட்டல் தளத்தில் டிரெய்லரை வெளியிடுவதற்கு பதிலாக, நாளை நடைபெறவுள்ள பிரம்மாண்டமான வெளியீட்டு விழாவில் ‘குபேரா’ டிரைலரை நேரடியாக வெளியிட ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளோம். இந்த அனுபவம், நாம் அனைவரும் ஒன்றிணைந்து பகிர்ந்து கொள்ளும்போது, இன்னும் அதிக தாக்கத்தையும், உணர்வுபூர்வமான சிலிர்ப்பையும் ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறோம்.
உங்கள் அன்பு, பொறுமை, மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. இந்தக் காத்திருப்பு நிச்சயம் பலன் தரும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்!
Our crew has been pouring heart and soul into every frame of #Kuberaa. After multiple internal discussions, we’ve collectively felt that the true essence of the trailer can only be felt in the right atmosphere, with our cast, crew, and audience together ♥️
— Kuberaa Movie (@KuberaaTheMovie) June 14, 2025
So instead of a…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments