விஜய்சேதுபதி-விமல் இணையும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்
விஜய் சேதுபதி மற்றும் விமல் ஆகிய இருவரும் திரையுலகில் வருவதற்கு முன்னர் கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்தவர்கள் என்பது தெரிந்ததே. தற்போது தமிழ் சினிமாவில் விஜய்சேதுபதி, விமல் ஆகிய இருவரும் தங்களுக்கென ஒரு இடத்தை இடத்தை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விஜய்சேதுபதி, விமல் இணைந்து உருவாகும் படம் ஒன்றின் தகவல் குறித்து கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் தற்போது இந்த படம் குறித்த மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன
விஜய்சேதுபதியின் கதை திரைக்கதை வசனத்தில் விமல் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ’குலசாமி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த படத்தை சரவணா சக்தி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 16ம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது