காலாவை திரையிடாமல் இருப்பது தான் நல்லது: முதல்வர் கருத்து

  • IndiaGlitz, [Tuesday,June 05 2018]

கர்நாடகா மாநிலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தை ரிலீஸ் செய்ய திரையரங்குகளுக்கு உத்தரவிட முடியாது என்று கூறிய கர்நாடக ஐகோர்ட், இருப்பினும் 'காலா' படத்தை திரையிட விரும்பும் கர்நாடக தியேட்டர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்து கர்நாடக முதவர் குமாரசாமி அவர்கள் கூறியபோது, 'காலா படத்தை திரையிட்டால் கர்நாடகாவில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புஉள்ளது. எனவே * மாநிலத்தின் அமைதிக்காக காலாவை திரையிடாமல் இருப்பது தான் நல்லது' என்று கூறியுள்ளார்.

முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவித்தால் 'காலா' படத்தை வெளியிட ஒத்துழைப்பதாக கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிக்கு நிபந்தனை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தடைகளை தாண்டி கர்நாடகாவில் 'காலா' வெளியாகுமா? என்பதை இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்

More News

பிலிம்பேர் விருதுக்கு செல்லும் தமிழ்ப்படங்களின் பட்டியல்

தேசிய விருதை அடுத்து திரையுலக நட்சத்திரங்கள் பெரிதும் மதிக்கும் விருதுகளில் ஒன்று பிலிம்பேர் விருதுகள். இந்த விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில்

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் பதவி: நடிகை நக்மா திடீர் நீக்கம்

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் மகளிர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்து வரும் நடிகை நக்மா, சற்றுமுன் தமிழக  மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு

'காலா' வழக்கு: கைவிட்டது கர்நாடக நீதிமன்றம்

ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் உலகம் முழுவதும் இம்மாதம் 7ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ளது. தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் அமெரிக்காவில் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில்

ஆன்மீக அரசியல் என்றால் என்ன? ரஜினியை மறைமுகமாக தாக்குகிறாரா சத்யராஜ்?

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பல படங்கள் நடித்திருந்தாலும் திரைக்கு வெளியே நடிகர் சத்யராஜ் பல நேரங்களில் ரஜினியை மறைமுகமாகவும் நேரிடையாகவும் தாக்கி பேசியுள்ளார்

ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

2019ஆம் ஆண்டு ஜனவ்ரி மாதம் 1ஆம் தேதி தமிழகத்தில் பிளாஸ்டி பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.