கும்பமேளாவில் குளறுபடி… 1 லட்சம் போலி கொரோனா முடிவுகள் வெளியானதாகப் பகீர் தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,June 15 2021]

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தைத் தொட்டபோது உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஆண்டுதோறும் 3 மாதம் கொண்டாடப்படும் இந்த விழா கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு வெறும் 30 நாட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இப்படி நடந்த கும்பமேளாவில் 10 நாட்களைக் கடந்தப்பின் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது. இதனால் அரசு, 22 தனியார் கொரோனா பரிசோதனை நிலையங்களை ஏற்படுத்தி கும்பமேளாவிற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் கொரோனா பரிசோதனையை நடத்தியது. இப்படி நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி கொரோனா பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் கும்பமேளா நிகழ்வுகள் தற்போது இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தியபோது ஒரே செல்போன் எண்ணில் 50க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை விவரங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் இதனால் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை மாதிரிகளுக்குப் போலியான முடிவுகள் அறிவிக்கப் பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அதோடு நாள் ஒன்றிற்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்குக் கொரோனா பரிசோதனையைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்தக் கொரோனா பரிசோதனையில் முறையான விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் 1 -30 வரை நடைபெற்ற கும்பமேளா நிகழ்ச்சியில் 70 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதாக அம்மாநில அரசு தகவல் வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

More News

லண்டனில் திடீரென காணாமல் போன 'ஜகமே தந்திரம்' நடிகர்: படப்பிடிப்பின்போது நடந்த பதட்டம்!

தனுஷ் நடித்த ;ஜகமே தந்திரம்; திரைப்படம் வரும் 18ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பூக்காரிக்கு பொருள் கொடுத்தேன்...! மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த கவிஞர்...!

இந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள் பலரும் தங்கள் உறவுகளை இழந்து வாடி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தினக்கூலிகள் பலரும் பொருளாதார ரீதியாக ஏராளமான துன்பவங்களை அனுபவித்து வருகிறார்கள்

மின்கட்டணம் அளிக்க குறிப்பிட்ட நாட்களுக்கு விலக்கு தேவை....! சீமான் அரசுக்கு கோரிக்கை....!

தமிழகத்தில் மின்கட்டணத்தை செலுத்த பொதுமக்களுக்கு 2 மாதங்களுக்கு விலக்க அளிக்க வேண்டும் என, தமிழக அரசிற்கு சீமான் வலியுறுத்தியுள்ளார்

மொட்டை ராஜேந்திரனுடன் விஜய் மகன், மகள்: வைரலாகும் 'தெறி' படப்பிடிப்பு புகைப்படம்!

தளபதி விஜய்யின் 'தெறி' படப்பிடிப்பு நடைபெற்றபோது அந்த படப்பிடிப்பிற்கு வந்திருந்த விஜய் மகன் சஞ்சய் மற்றும் விஜய் மகள் திவ்யா ஆகியோர்  நடிகர் மொட்டை ராஜேந்திரனுடன் இணைந்து எடுத்த

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் தங்கையா இவர்? வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமியை தெரியாதவர்கள் இருக்க முடியாது