ஷட்டப், வாயை மூடு: குஷ்பு-காயத்ரியின் காரசாரமான விவாதம்

சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு 22 வயது இளைஞர் திருடிவிட்டதாக ஒரு கும்பல் தாக்கியது. தாக்கியவர்களில் ஒருவர் அந்த இளைஞரை ஜெய்ஸ்ரீராம் சொல்லும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். பின்னர் அந்த இளைஞரை மீட்ட போலீசார் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சையின் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விஷயத்தில் அந்த இளைஞர் திருடர் என்பதையெல்லாம் மறந்துவிட்ட சமூக வலைத்தள போராளிகள், அவரை ஜெய்ஸ்ரீராம் என்று யாரோ ஒருவர் சொல்ல சொன்ன வீடியோ கிளிப்பிங்ஸை மட்டும் வைரலாக்கி மதக்கலவரங்களை தூண்டிவிட்டனர். இதுகுறித்து நடிகை குஷ்புவும் ஆவேசமாக தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இதுதான் புதிய இந்தியாவா? ஜெய்ஸ்ரீராம் சொல்ல சொல்லி கட்டாயப்படுத்தி ஒரு இளைஞரை ஒரு கும்பல் கொன்றே விட்டது என்று ஆதங்கப்பட்டார். ஆனால் அந்த இளைஞர் ஒரு திருடர் என்பது குறித்தும் அவர் திருடியது குறித்தும் குஷ்பு ஒரு வரிகூட பதிவு செய்யவில்லை

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம், 'இந்துக்கள் என்றாலே கொலைகாரர்கள் என்ற ரீதியில் சொல்வது தற்போது டிரண்ட் ஆகிவிட்டது. மற்ற மதத்தினர் இதே தவறை செய்யும்போது குஷ்பு ஏன் வாயை திறப்பதில்லை? என்று கூறினார்.

அதற்கு குஷ்பு, 'உங்களை போன்றவர்களிடம் நான் விவாதம் செய்ய தயாராக இல்லை. மறைந்த உங்கள் தந்தை, தாயார் மற்றும் உங்கள் உறவினர்கள் அனைவர் மீதும் நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். எனவே ஷட்டப், வாயை பொத்தி கொண்டு இருக்கவும்' என்று பதிவு செய்தார்.

இதற்கு மீண்டும் பதிலளித்த காயத்ரி, 'நீங்கள் என் குடும்பத்தினர் மீது அன்பு வைத்துள்ளீர்கள் என்பதற்காக என் மதத்தை இழிவு செய்தால் நான் சும்மா இருக்க முடியாது. என் உலகம் பரந்து விரிந்த உலகம். மரியாதையாக பேச கற்று கொள்ளவும்' என்று கூறியதோடு, ஒரு ஆக்கபூர்வமான விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது என் குடும்பத்தினர் மீது அன்பு வைத்திருப்பதாக கூறி நழுவ வேண்டாம். அது உங்கள் இயலாமையை காட்டுகிறது. நான் உங்களுக்கு எதிர்க்கட்சியில் இருக்கின்றேன். நான் கேட்கும் கேள்விக்கு பதிலளியுங்கள். உங்கள் மீது தனிப்பட்ட வகையில் எனக்கு எந்த பகையும் இல்லை. நான் எனது உரிமைக்காக வாதிடுகிறேன்' என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

குஷ்பு-காயத்ரி ரகுராம் ஆகியோர்களின் இந்த காரசாரமான விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது