பாஜக பிரமுகருடன் சென்று எஸ்பிபி மனைவியை சந்தித்த நடிகை!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் காலமான நிலையில் அவருடைய வீட்டிற்குச் சென்று அவருடைய மனைவியை பாஜக பிரமுகர் உடன் சென்று நடிகை ஒருவர் சந்தித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன்பின் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எஸ்பிபி அவர்களுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டதை அடுத்து அவருடைய வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவிக்க பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு சென்றார். அவருடன் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்களும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் எஸ்பிபி மனைவி சாவித்திரி மற்றும் மகன் எஸ்பிபி சரண் ஆகியோரை நேரில் சந்தித்து, எஸ்பிபிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது குறித்து சாவித்ரி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர். இது குறித்த புகைப்படங்களை நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ளார் என்பதும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தமிழக வீரர் நடராஜனிடம் பேசிய தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள்: வீடியோ வைரல்

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனிடம் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

அடையாளம் தெரியாத பிணத்தை 2 கி.மீ தோளில் சுமந்த பெண் எஸ்.ஐ… குவியும் பாராட்டு!

ஆந்திர மாநிலத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விவசாய நிலத்தில் இறந்து கிடந்தார். இதையடுத்து போலீசுக்கு கொடுக்கப்பட்ட தகவலின்

அமைதியை தேடி கோவிலுக்கு சென்ற பிக்பாஸ் ஷிவானி: வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் அந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கும் மேல் அமைதியாக ஆர்ப்பாட்டம் இன்றி இருந்தார்.

இதனால் தான் கேபியை என் மகள் என்றேன்: அர்ச்சனா வெளியிட்ட அன்பு புகைப்படம்!

பிக்பாஸ் வீட்டில் ஒரு சிலரை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அன்பு குரூப் வைத்திருந்ததாக அர்ச்சனா மீது குற்றம்சாட்டப்பட்டது.

ஷங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதா? அவரே அளித்த விளக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'எந்திரன்' படத்தின் கதை விவகாரம் குறித்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில்