முட்டாள்களே, இதைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டதே இல்லை: குஷ்புவின் காட்டமான பதிவு!

  • IndiaGlitz, [Tuesday,September 06 2022]

முட்டாள்களே இதைப்பற்றி நீங்கள் கேள்விப் பட்டதே இல்லையா என குஷ்பு காட்டமாக தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் நடிகை, தயாரிப்பாளர் மற்றும் பாஜக நிர்வாகியாகவும் இருக்கும் குஷ்பு அவ்வப்போது வெளிநாடு சென்று வருவார் என்பதும் சமூகவலைதளத்தில் அது குறித்த புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் சமீபத்தில் லண்டன் சென்ற நடிகை குஷ்பு ஒரு வீட்டில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’என்னுடைய புதிய வீட்டில் முதல் கப் டீ சாப்பிடுகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து பலர் கமெண்ட்ஸ் பகுதியில் லண்டனில் புதிய வீடு வாங்கி விட்டீர்களா? உங்களுக்கு இருக்கும் பணத்தில் உலகத்திலுள்ள எங்கு வேண்டுமானாலும் வீடு வாங்கலாம் என்று கமெண்ட் செய்தனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறி கமெண்ட்கள் பதிவானதால் குஷ்பு காட்டமாக அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

என்னை சுற்றி பல தோல்வி அடைந்த, பொறாமை கொண்டவர்களை நான் பார்க்கின்றேன். லண்டனில் புதிய வீட்டில் இருக்கிறேன் என்று சொன்னால் அது சொந்த வீடு என்று அர்த்தமா? முட்டாள்களே, நீங்கள் வாடகை வீடு என்று ஒன்று இருப்பதை பற்றி கேள்விப்பட்டதே இல்லையா? ஒரு பெண் சுதந்திரமாகவும் வெற்றிகரமாகவும் இருந்தால் ஏன் பலருக்கு பார்ப்பதற்கு வலிக்கிறது என்பது எனக்கு புரியவில்லை’ என்று பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த பதிவை அடுத்து லண்டனில் அவர் வாடகைக்கு வீடு எடுத்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

'நானே வருவேன்' படத்தின் ஒன்லைன் கதை: தனுஷ் வெளியிட்ட மாஸ் தகவல்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'நானே வருவேன்' திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உறியடி விஜய்குமாரின் புதிய படம்: 62 நாட்களில் முடிந்த படப்பிடிப்பு!

'உறியடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஜயகுமார் நடிப்பில் , சேத்துமான் படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் தயாராகிவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும்

பிக்பாஸ் தமிழ் சீசன் 6, அதிகாரபூர்வ அறிவிப்பு: தொகுத்து வழங்குபவர் இவர் தான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் என்பதும் இந்த நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. 

'நானே வருவேன்' படத்தின் ரிலீஸ் அப்டேட்: கலைப்புலி எஸ் தாணு அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நானே வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 

ஜெயம் ரவி - கீர்த்தி சுரேஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் இன்னொரு பிரபல நடிகை இணைந்துள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.