close
Choose your channels

எனக்கு எதிராக தேர்தலில் போட்டியிட தயாரா? உதயநிதிக்கு சவால்விட்ட நடிகை!

Saturday, January 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் சட்டமன்ற தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா என நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதிக்கு சவால் விட்ட நடிகை ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும், வரும் சட்டமன்ற தேர்தலில் அவர் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறிய நடிகை குஷ்பு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்தபோது ’வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிட உதயநிதி ஸ்டாலின் தயாரா? என கேள்வி எழுப்பினார். இந்த கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஷ்புவின் இந்த சவாலுக்கு உதயநிதி என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

மேலும் இதே பேட்டியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் வேட்பாளராக மாநில கட்சிகளே ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தேசிய ஜனநாயக கூட்டனியின் முதல்வர் வேட்பாளரை இன்னும் ஒரு சில நாட்களில் பாஜக தலைமை வெளியிடும் என்றும் குஷ்பு கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.