இவர்கள் இணைவதால் மக்களுக்கு என்ன பயன்? பிரபல நடிகை கேள்வி

  • IndiaGlitz, [Monday,August 21 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக, ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, தினகரன் அணி என மூன்று பிரிவுகளாக பிரிந்துள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைய கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் இன்று அந்த இணைப்பு நடக்கும் சாத்தியக்கூறுகள் தெரிகின்றன
இந்த நிலையில் இந்த இணைப்பு குறித்து சற்றுமுன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்த நிலையில் பிரபல நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு, 'இவர்கள் இணைவதால் மக்களுக்கு என்ன பயன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் இதுகுறித்து கூறியதாவது:
நேற்று வரை எப்படி எப்படியெல்லாம் திட்டிக் கொண்டார்கள். இப்போது எப்படி திடீரென்று இணைந்தார்கள். பேரம் படிந்து இருக்கிறது. நேரம் வந்து விட்டது. சேர்ந்து விட்டார்கள். நினைத்துப் பார்த்தால் கேலிக் கூத்தாகத்தான் தெரியும். இவர்கள் இணைவதால் மக்களுக்கு என்ன பயன்? அவர்களுக்கு மட்டும் நன்மை இருக்கலாம்.
நாலு வருடம் நாற்காலியில் இருப்பது எப்படி? பணம் சம்பாதிப்பது எப்படி? என்பது மட்டும்தான் அவர்களது குறிக்கோள். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அ.தி.மு.க.வில் எத்தனை அணிகள் வந்தாலும் சரி, எத்தனை அணிகள் இணைந்தாலும் சரி மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது.
கட்சியில் இணைந்தாலும், ஆட்சி நீடிக்க வேண்டுமே. 3-வது அணியான தினகரன் அணியில் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்? அவர்களும் பேரத்துக்கு சோரம் போய்விடுவார்களா? என்பதை பார்க்க வேண்டுமே. சசிகலா பண பலத்தால் எதையும் சாதிப்பார். கூவத்தூரில் ரிசார்ட் அரசியல் செய்யவில்லையா? ஜெயிலுக்குள்ளும் தாராளமாக வெளியே சென்று வரவில்லையா?
இனியும் கூவத்தூர் பாணியில் ரிசார்ட் அரசியல் நடத்தமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? பா.ஜனதாவால் தமிழகத்துக்குள் நுழைய எந்த வழியும் இல்லை. அதனால் இந்த பாதையை தேர்வு செய்து இருக்கிறார்கள். அவர்களின் நெருக்கடியால் இணைகிறார்கள். 4 வருடமும் இப்படியே அடிமைபோல் இருப்பார்கள். ஆனால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

More News

இன்று 4.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

அதிமுகவின் இரு அணிகள் தற்போது இணைவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் இந்நாள் முதல்வர் ஈபிஎஸ் அவர்களும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சற்றுமுன் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ள நிலையில் ஆளுனர

தமிழன் தலையில் கோமாளிக்குல்லா! கமல்ஹாசனின் டுவீட் எதை குறிக்கின்றது

அதிமுகவின் இரு அணிகளாக செயல்பட்டு கொண்டிருந்த ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி ஆகிய இரு அணிகளும் இன்று அதிகாரபூர்வமாக இணையவுள்ளன.

ஓவியாவை பிக்கப் செய்ய முயற்சித்தாரா வையாபுரி?

பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து பார்த்து வருபவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரியும்.

காமெடி நடிகர் செந்தில் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்

தமிழ் திரையுலகில் சுமார் 40 ஆண்டுகாலமாக நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் செந்தில் ஒருசில ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார்.

'விஐபி 2' படத்தை பார்த்த டிரைவரை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை

தனுஷ், நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகி இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.