'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பில் சுந்தர் சி - நயன்தாரா மோதலா? குஷ்பு விளக்கம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில், 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று திடீரென சுந்தர் சி மற்றும் நயன்தாரா இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதாகவும், இதன் பின்னர் நயன்தாரா படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதனை அடுத்து, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தலையிட்டு, இருவரையும் சமாதானப்படுத்தி வந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், இருவருக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.
இதனால், இந்த படம் அடுத்த கட்டத்துக்கு செல்லுமா, அல்லது டிராப் ஆகுமா என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை மற்றும் தயாரிப்பாளர் குஷ்பு இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தனது எக்ஸ் ) பக்கத்தில் இதுபற்றி அவர் கூறியதாவது:
’மூக்குத்தி அம்மன் 2’ படத்தை சுற்றி தேவையற்ற வதந்திகள் அதிகமாக பரவி வருகின்றன. தயவுசெய்து அதனை நம்ப வேண்டாம். படப்பிடிப்பு மிகவும் சுமூகமாக நடைபெற்று வருகிறது, திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடந்து வருகின்றன.
எல்லோருக்கும் தெரியும் சுந்தர் சி ஒரு அனுபவம் உள்ள புத்திசாலி என்று. அவர் எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக கையாள்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் நயன்தாரா ஒரு மிகுந்த திறமைசாலியான, தொழில்முறை நடிகை. தன்னுடைய வெற்றிகரமான கேரக்டர் மீண்டும் கிடைத்துள்ளதால் அவர் மகிழ்ச்சியுடன் பணிபுரிந்து வருகிறார்.
இந்த வதந்திகள் எல்லாம் "திருஷ்டி எடுத்த மாதிரி". நடக்கின்ற அனைத்தும் நல்லதற்கே. உங்கள் அன்பும், ஆசி, ஆதரவுதான் எங்களுக்கு முக்கியம். எப்போதும் எங்களுடன் இருப்பதற்காக நன்றி! எனவே வதந்தைகளை கவனத்தில் கொள்ளாமல் அமைதியாக இருங்கள், ஒரு பொழுதுபோக்கு ஒரு மெகா ஹிட் திரைப்படத்திற்காக காத்திருக்கவும்’ என்று தெரிவித்துள்ளார்.
To all the wellwishers of #SundarC Sir. Too many unwanted rumors are floating about ##MookuthiAmman2 . Please loosen up. Shoot is underway smoothly and going as planned. Everyone knows Sundar is a no nonsense person. #Nayanthara is a very professional actor who has proved her…
— KhushbuSundar (@khushsundar) March 25, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments