'வாரிசு' படத்தில் ஒரு காட்சியில் கூட இல்லை.. ஆனால் குஷ்புவுக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

  • IndiaGlitz, [Thursday,February 23 2023]

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தில் குஷ்பு ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்ததாக கூறப்பட்டாலும் படம் வெளியான பிறகு அவர் நடித்த ஒரு காட்சி கூட படத்தில் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இந்த நிலையில் ஒரு காட்சி கூட படத்தில் இல்லாத குஷ்புக்கு சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தில் நாயகி ராஷ்மிகாவின் அம்மாவாக குஷ்பு நடித்திருந்ததாக கூறப்பட்டது. குஷ்புவின் நடிப்பு இந்த படத்தில் மிகவும் அபாரமாக இருந்ததாகவும் அவரது கேரக்டர் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு இருந்ததாகவும் ஆனால் அதே நேரத்தில் படத்தின் நீளம் கருதி அவரது கேரக்டரை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என ’வாரிசு’ படத்தின் எடிட்டர் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். இருப்பினும் டெலிடட் காட்சிகள் வெளியாகும்போது குஷ்புவின் நடிப்பை நீங்கள் பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் ’வாரிசு’ திரைப்படத்தில் குஷ்பு நடித்த காட்சி இல்லை என்றாலும் அவரது சம்பளம் 40 லட்சம் ரூபாய் என்ற தகவல் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஷ்பு இந்த படத்தில் நடித்த காட்சிகள் மட்டும் 17 நிமிடங்களில் இருந்ததாகவும் அவை விரைவில் டெலிடட் காட்சிகளாக வெளிவரும் என்று கூறப்படுகிறது.

More News

'வாரிசு' உள்பட இந்த வார ஓடிடி ரிலீஸ்.. ரசிகர்களுக்கு செம விருந்து..!

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' உள்பட இந்த வாரம் ஓடிடியில் சில முக்கிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு செம விருந்தை அளித்துள்ளன. 

மால டம் டம்… மஞ்சர டம் டம்… நடிகை மிருணாளினியின் மாலத்தீவு பீஸ் போட்டோஷூட்..!

 விஷால் நடித்த 'எனிமி' என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற மால டம் டம்… மஞ்சர டம் டம்…  என்ற பாடலில் நடிகை மிருணாளினி தற்போது மாலத்தீவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் தனது இன்ஸ்டாவில்

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் பிரபல ஹீரோ இணைகிறாரா?

தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல ஹீரோ மற்றும் இயக்குனர் ஒருவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

ஒரு நல்ல படத்தை இப்படியா சொதப்புவது? 'கைதி' இந்தி ரீமேக்கில் ஐட்டம் பாடல்..!

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'கைதி' திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகி வருகிறது.

'பகாசூரன்' வெற்றிக்காக தானே களமிறங்கிய இயக்குனர் மோகன் ஜி: வைரல் வீடியோ..!

 'பகாசூரன்' வெற்றிக்காக இயக்குனர் மோகன் ஜி தானே களம் இறங்கி போஸ்டர் ஒட்டிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது