இதை செய்யலைன்னா சுந்தர் சியை திட்டுவேன்.. சிம்ரன் முன்னிலையில் கூறிய குஷ்பு..!

  • IndiaGlitz, [Monday,May 06 2024]

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’ திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி வார இறுதியில் திருப்திகரமான வசூலை பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படம் சுந்தர் சி அவர்களுக்கு ஒரு வெற்றி படமாகவே கருதப்படுகிறது.

குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் குஷ்பு மற்றும் சிம்ரன் நடனமாடும் பாடல் அசத்தலாக இருந்ததாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் இந்த பாடல் குறித்த விமர்சனங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குஷ்பு அக்காவுடன் இணைந்து ஆடியது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் சுந்தர் சி படத்தில் மீண்டும் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் நேற்று சிம்ரன் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது குஷ்பு இது குறித்த வீடியோவை வெளியிட்டு ’நானும் சிம்ரனும் கஷ்டப்பட்டு வெயிலில் நடனம் ஆடி உள்ளோம், பிருந்தா மாஸ்டரும் கஷ்டப்பட்டு உள்ளார், ஆனால் இயக்குனர் சுந்தர் சி மட்டும் நிழலில் உட்கார்ந்து மானிட்டரில் பார்த்துக் கொண்டே ’நீ ஆடுவதை பார்க்கும் போது எனக்கு கஷ்டமாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். நாங்கள் ஆடிய எல்லாவற்றையும் ரெக்கார்ட் செய்ய வேண்டும் என்று இல்லையென்றால் நான் சுந்தர்சியை திட்டுவேன்’ என்றும் குஷ்பு தெரிவித்தார்.

இதனை அடுத்து அவர் சிம்ரனிடம் ’நீங்கள் ஆடிய ஆட்டம் சூப்பராக இருந்தது’ என்றும் கூற ’நீங்கள் நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்போது மீண்டும் ஆடுகிறீர்கள், உங்கள் டான்ஸ் அருமையாக இருந்தது, குறிப்பாக நீங்கள் கையில் வேல் வைத்துக்கொண்டு ஒரு பார்வை பார்த்தீர்களே, அது சூப்பராக இருந்தது’ என்று கூற இருவரும் மாறி மாறி புகழ்ந்து கொண்ட காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.

இதனை அடுத்து சிம்ரன் ’சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் நடித்தது தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும் ’ஐந்தாம் படை’ படத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்துள்ளோம் என்றும் இந்த படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்தார்.

More News

திடீரென நடுகாட்டிற்கு சென்று குதித்து விளையாடும் அமலாபால்.. என்ன ஆச்சு?

நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் திடீரென நடுக்காட்டில் குதித்து விளையாடிய வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

டெல்லியில் 'தக்லைஃப்' படப்பிடிப்பு.. கமல்ஹாசனுடன் யார் யார்? இன்று ஒரு சர்ப்ரைஸ் இருக்குது..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது டெல்லியில்

த்ரிஷா பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் செய்த தரமான சம்பவம்.. வைரல் வீடியோ..

நடிகை த்ரிஷா பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் செய்த தரமான சம்பவம் குறித்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

குமரிமுத்து பேட்டியின் வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்.. என்ன சொல்ல வருகிறார்?

மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அளித்த பேட்டியின் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்

'தல ரஜினி இன்னும் மாறவே இல்லை.. ரஜினி எப்போ 'தல' ஆனார்.. பிரபலத்தின் பதிவு..!

'தல ரஜினிகாந்த் இன்னும் மாறவே இல்லை என்றும் அவர் கிரேட்டஸ்ட் நபர்' என்று பிரபலம் ஒருவர் தான் அது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் 'ரஜினி எப்போ தல ஆனார்' என்று ரசிகர்கள் கேள்வி