close
Choose your channels

என் மாமியாருக்கு அவர் தான் ஹீரோ.. குஷ்பு சொன்னது யாரை தெரியுமா?

Friday, April 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எனது 88 வயது மாமியாருக்கு தல தோனி தான் ஹீரோ என்று நடிகை குஷ்பு தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.

தல தோனியை பிடிக்காதவர்களை இருக்க முடியாது என்பதும் கிரிக்கெட் சாராத துறைகளில் இருப்பவர்களுக்கு கூட தோனியை மிகவும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திரையுலகில் தல தோனிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பதும் பல திரை உலக பிரபலங்கள் பலர் தோனியை தங்களது தலைவர் என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை குஷ்பு தனது மாமியார் தோனியின் தீவிர ரசிகை என்று கூறியுள்ளதோடு அவருடன் தனது மாமியார் எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் ’ஹீரோக்கள் உருவாக்கப்படுவதில்லை, அவர்கள் பிறக்கிறார்கள், அதை தோனி நிரூபித்துள்ளார். எங்கள் சிஎஸ்கே ’தல’க்காக நாங்கள் வாழ்த்துகிறோம்.

சமீபத்தில் தோனியை என் மாமியாரை சந்தித்தார், தோனியின் அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலில் இருக்கும் என் மாமியார் இருக்கும் புகைப்படம் தான் இது. 88 வயதில் ஹீரோ தோனியை அவர் வணங்குகிறார், தோனி நீங்கள் பல வருடங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும், அதற்காக நான் இறைவனை பிரார்த்தனை செய்கிறேன், இதை சாத்தியப்படுத்திய சிஎஸ்கே அணிக்கு ஒரு விசில் போடு’ என்று பதிவு செய்துள்ளார். குஷ்புவின் இந்த பதிவை தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.