'அண்ணாத்த' படத்தில் ரஜினியின் கேரக்டர்: குஷ்பு கூறிய ரகசியம்!

  • IndiaGlitz, [Tuesday,October 19 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படத்தில் ரஜினியின் கேரக்டர் குறித்து மறைமுகமாக குஷ்பு கூறிய கருத்து தற்போது வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள குஷ்பு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘’அண்ணாத்த’ திரைப்படத்தில் ரஜினியின் ’அண்ணாமலை’ ’அருணாச்சலம்’ ’முத்து’ ’படையப்பா’ போன்ற 90களில் வெற்றிபெற்ற படத்தில் பார்த்த ரஜினியை பார்க்கலாம் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் படம் முழுவதும் இளமையான தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும், இந்த படத்தில் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கின்றது என்றும் தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் குஷ்புவின் கேரக்டர் என்ன என்பது குறித்து அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார். இருப்பினும் குஷ்பு இந்த படத்தில் லிவிங்ஸ்டனுக்கு ஜோடியாக நடித்து உள்ளதாகவும் பாண்டியராஜ் ஜோடியாக மீனா நடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் குஷ்பு அந்த பேட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மிகச்சரியாக படப்பிடிப்புக்கு வருவார் என்றும் ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும் கூட அனைவரிடமும் மன்னிப்பு கேட்பார் என்றும் அவர் அந்த அளவிற்கு மிகவும் எளிமையானவர் என்றும் கூறியுள்ளார்.

More News

நடிகை ஸ்ரேயா மகளுக்கு “ராதா“ பெயர்…. காரணத்தை கேட்டு அசந்துபோன ரசிகர்கள்!

நடிகை ஸ்ரேயா சரண் தன்னுடைய மகளுக்கு “ராதா“ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

சாப்பிடும் போட்டோவை ஷேர் செய்தால் உடல்எடை கூடுமா? பயமுறுத்தும் புது தகவல்!

பசிக்கு சாப்பிடாமல் ருசிக்கு, அதுவும் அளவே இல்லாமல் சாப்பிட்டால்

அபிஷேக் காலில் விழுந்த தாமரை: எல்லாம் இதுக்குதானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரமோ வீடியோவில் அபிஷேக் காலில் விழுந்து கதறி அழும் தாமரை குறித்த காட்சிகள் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நாமினேஷனில் திடீர் திருப்பம்: ஒருவர் தப்பிக்க வாய்ப்பு கொடுத்த பிக்பாஸ்!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் அபிஷேக், பாவனி ரெட்டி, அக்சரா, இசைவாணி, சின்னப்பொண்ணு, ஸ்ருதி, ப்ரியங்கா, அபினய், ஐக்கி, தாமரை ஆகிய 10 போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர்

பிக்பாஸ் 5: இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்கள் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று இரண்டாவது வாரமாக வெளியேற்றப்படும் போட்டியாளருக்கான நாமினேஷன் நடந்தது. இதில் 10 போட்டியாளர்கள்