திரையுலகிற்கு வந்து 30 ஆண்டுகள்.. கணவர் சுந்தர் சி குறித்து குஷ்புவின் அசத்தல் பதிவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரையுலகின் வெற்றி இயக்குனராக 30 ஆண்டுகள் வலம் வந்து கொண்டிருக்கும் சுந்தர் சிக்கு அவரது மனைவியும் நடிகையுமான குஷ்பு வாழ்த்து தெரிவித்து, தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் சுந்தர் சி, இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக சில படங்களில் பணிபுரிந்த நிலையில், 1995ஆம் ஆண்டு "முறைமாமன்" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு "முறை மாப்பிள்ளை", "உள்ளத்தை அள்ளித்தா", "மேட்டுக்குடி" உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "அருணாச்சலம்" திரைப்படத்தை 1997ஆம் ஆண்டு இயக்கினார். அதன் பின்னர் "ஜானகிராமன்", "உன்னை தேடி", "உள்ளம் கொள்ளை போகுதே", "ரிஷி" போன்ற படங்களை இயக்கினார்.
2003ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த "அன்பே சிவம்" படத்தை இயக்கினார். இதனை அடுத்து "வின்னர்", "கிரி’ ’லண்டன் 2", "கலகலப்பு", "தீயா வேலை செய்யணும்", உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
அதன்பின் "அரண்மனை" படத்தின் நான்கு பாகங்களையும் அடுத்தடுத்து இயக்கினார். "கலகலப்பு" படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கினார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கிய "மதகஜராஜா" சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான "கேங்கர்ஸ்" படமும் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் நயன்தாரா நடித்த வரும் "மூக்குத்தி அம்மன் 2" படத்தை இயக்கி வருகிறார்.
இயக்குனராக மட்டுமின்றி, பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பதும், மேலும் அவர் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமின்றி, அவ்னி சினி கிரியேஷன்ஸ் சார்பில் பல திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். மேலும், "நந்தினி", "மாயா", "லட்சுமி ஸ்டோர்ஸ்", "ஜோதி" உள்ளிட்ட சீரியல்களையும் அவர் திரைக்கதை எழுதி தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் 30 ஆண்டுகள் வெற்றிகரமாக இயக்குநராக நீடித்திருப்பது மிகவும் அரிதான ஒன்று. மணிரத்னம் அவர்களை அடுத்து, சுந்தர் சி மட்டுமே இவ்வளவு நீண்ட காலம் தொடர்ச்சியாக வெற்றி படங்களைத் தமிழ் திரையுலகிற்கு வழங்கி வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு நமது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
Celebrating 30 years of unwavering passion and dedication, my love! 🎬❤️
— KhushbuSundar (@khushsundar) May 19, 2025
From the moment I met you as a fresh-faced newcomer, I saw a spark of brilliance in you. Your enthusiasm was contagious, and I knew deep down you were destined to rule as the King of commercial cinema.… pic.twitter.com/mKBjag98ir
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com