அனைத்து பெண்களுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு முன்னுதாரணம்: குஷ்பு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அனைத்து பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருப்பதாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் முசாபர் என்ற மியூசிக் ஆல்பத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த ஆல்பத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகிய நிலையில் விரைவில் முழு ஆல்பமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆல்பத்திற்கு ஏற்கனவே பிரபுதேவா தனது வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது நடிகை குஷ்புவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தப் பெயரைக் கேட்டவுடன் தோன்றும் அழகான விஷயம் என்னவென்றால் இவ்வளவு அழகான ஒரு இயக்குனராக இருக்கிறார், ஒரு டான்ஸர் ஆகவும், ஒரு தாயாகவும் இவ்வளவு பெரிய தந்தைக்கு மகளாகவும் உள்ளார்.

இதையெல்லாம் தாண்டி அவர் சுயமாக சிந்திக்கக் கூடியவர். எனக்கு தெரிந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எது செய்தாலும் அது அவருடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு ஏற்ற மாதிரி தான் செய்வார். மேலும் அவர் ஒவ்வொரு பெண்ணுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் இருந்து வருகிறார். இந்த ஆல்பம் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்.

9 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கேமராவுக்கு பின் அவர் களமிறங்கியுள்ளார். அவர் இதற்கு எடுத்த படங்களைப் பார்க்கும்போது ஒவ்வொரு படத்திலும் அவர் ஒரு சமூக மெசேஜை கொடுத்திருப்பார்.

இன்று இந்த மியூசிக் வீடியோவில் உள்ள அழகான காட்சிகளை பார்க்கும் போது பெருமையாக உள்ளது. அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சின்னச்சின்ன விஷயங்களான காதல் அன்பு எல்லாமே கலந்து ஒரு எமோஷனல் ஆல்பமாக இயக்கியுள்ளார். இந்தப் பயணத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

More News

மேலாடைக்கு பதிலாக மாற்று ஐடியா: பிக்பாஸ் நடிகையின் வீடியோ வைரல்!

பிக்பாஸ் ஓடிடி நடிகை ஒருவர் மேலாடைக்கு பதிலாக மாற்று ஐடியா கண்டுபிடித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

'ராதே ஷ்யாம்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்த 'ராதே ஷ்யாம்'  என்ற திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் பாசிட்டிவ் மற்றும்

அரபிக்குத்து பாடலுக்கு லேட்டஸ்ட்டாக டான்ஸ் ஆடிய பிரபல நாயகி!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது மற்றும் என்பது மட்டுமின்றி

என் மகன் அஜித் ரசிகர், இருந்தாலும் சும்மா விட மாட்டேன்: 'மெட்ரோ' தயாரிப்பாளர் ஆவேசம்

 என் மகன் தீவிர அஜீத் ரசிகராக இருந்தாலும் அஜித்தின் 'வலிமை' படத்தை சும்மா விடமாட்டேன் என 'மெட்ரோ' படத்தின் தயாரிப்பாளர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

ஒரு சின்ன தீப்பொறி போதும், மொத்தமும் அழிந்துவிடும்: வைரலாகும் கார்த்தி வீடியோ!

கொடைக்கானல் மலையில் கடந்த சில நாட்களாக காட்டு தீ கொழுந்து விட்டு எரிந்து வரும் நிலையில் அங்கு உள்ள அபூர்வமான மூலிகைகள் மற்றும் மரங்கள் தீயில் கருகி வருகின்றன.